ஃபரூக்காபாத் போர்

ஃபரூக்காபாத் போர் (Battle of Farrukhabad) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படையினருக்கும் மராட்டியப் பேரரசு மன்னர் யசுவந்தராவ் ஒல்கருக்கும் இடையில் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் காலத்தில் 1804 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் நடைபெற்ற ஒரு போராகும்.

போர்க்களம்

தற்பொழுது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஃபரூக்காபாத் நகரில் இப்போர் நடைபெற்றது. செனரல் கெரார்டு லேக் பிர்த்தானியப் படைக்கு தலைமை வகித்தார். 24 மணி நேரத்தில் 97 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வந்து இவரது படை மகாராசா ஒல்கர் படைக்கு வியப்பை உண்டாக்கியது. மராட்டியர்களின் படை உறங்கிக் கொண்டிருந்த போதே லேக் தாக்குதலை தொடங்கிவிட்டார். ஒல்கர் தப்பியோடிய போதும் வழியில் பிடிபட்டார்[1]

புவியியல்

வட இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பரூக்காபாத் மாவட்டத்திலுள்ள மூன்று வட்டங்களில் ஒன்றாக பரூக்காபாத் நகரம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.