அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
All Ceylon Tamil Congress
අකිල ඉලංකෙයි තමිල් කොංග්‍රස්
நிறுவனர்ஜி. ஜி. பொன்னம்பலம்
செயலாலர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தொடக்கம்29 ஆகத்து 1944 (80 ஆண்டுகள் முன்னர்) (1944-08-29)
தலைமையகம்15 இராணி வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 3
கொள்கைதமிழ்த் தேசியம்
தேசியக் கூட்டணிதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நாடாளுமன்றம்
1 / 225
தேர்தல் சின்னம்
மிதிவண்டி
கட்சிக்கொடி
இலங்கை அரசியல்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) என்பது இலங்கையின் மிகப் பழமையான தமிழ் அரசியல் கட்சி ஆகும்.

வரலாறு

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியை ஜி. ஜி. பொன்னம்பலம் 1944 ஆம் ஆண்டில் தொடங்கினார். பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தை (பெரும்பான்மை சிங்களவர்களுக்கு 50%, ஏனைய அனைத்து இனக்குழுக்களுக்கும் 50%) கோரினார்.[1] அன்றைய பிரித்தானிய ஆளுநர் சோல்பரி பிரபு "மக்களாட்சியைக் கேலி செய்வது" என்று இக்கோரிக்கையை நிராகரித்தார். காங்கிரசுக் கட்சி அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க முடிவு செய்ததால், சா. ஜே. வே. செல்வநாயகம் இக்கட்சியில் இருந்து 1940 ஆம் ஆண்டில் விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். காங்கிரசின் கூட்டாளியான ஐக்கிய தேசியக் கட்சி இருமொழிக் கொள்கைகளிலிருந்து சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தபோது தமிழ்க் காங்கிரசுக் கட்சி பெருமளவில் மதிப்பிழந்தது. 1976 இல் தமிழ்க் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கின.

2001 தேர்தல்களுக்கு முன்னதாக, விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ்க் காங்கிரசு இணைந்தது. 2004 தேர்தலில் ததேகூ நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 22 இடங்களை வென்றது. 2010 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ததேகூ இலிருந்து வெளியேறி, புதிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தொடங்கியது.

தலைவர்கள்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர்களாக இருந்தவர்கள்:

தேர்தல் வரலாறு

1947 நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கை விடுதலை பெற்று நடைபெற்ற முதலாவது 1947 தேர்தலில், தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 7 ஐக் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதி வாக்குகள் % இருக்கைகள் வாக்குவீதம் காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி 11,813 85.51% 1 49.34% வே. குமாரசுவாமி
யாழ்ப்பாணம் 14,324 73.28% 1 46.26% ஜி. ஜி. பொன்னம்பலம்
காங்கேசன்துறை 12,126 55.39% 1 57.69% சா. ஜே. வே. செல்வநாயகம்
ஊர்காவற்றுறை 5,230 29.21% 0 55.69%
கோப்பாய் 9,619 58.90% 1 50.33% கு. வன்னியசிங்கம்
பருத்தித்துறை 10,396 43.51% 1 58.39% தா. இராமலிங்கம்
திருகோணமலை 5,252 56.15% 1 56.10% சுப்பிரமணியம் சிவபாலன்
வட்டுக்கோட்டை 11,721 61.24% 1 52.00% கந்தையா கனகரத்தினம்
வவுனியா 2,018 33.39% 0 55.64%
மொத்தம் 82,499 4.37% 7
மூலம்:[2]

1952 நாடாளுமன்றத் தேர்தல்

1952 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 4 ஐக் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதி வாக்குகள் % இருக்கைகள் வாக்குவீதம் காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி 14,801 72.33% 1 67.22% வே. குமாரசுவாமி
யாழ்ப்பாணம் 12,726 60.48% 1 71.66% ஜி. ஜி. பொன்னம்பலம்
ஊர்காவற்றுறை 9,517 43.44% 1 73.36% அல்பிரட் தம்பிஐயா
கோப்பாய் 9,200 43.88% 0 64.57%
பருத்தித்துறை 11,609 41.54% 1 65.80% தா. இராமலிங்கம்
வட்டுக்கோட்டை 5,261 22.64% 0 69.54%
வவுனியா 1,398 15.52% 0 69.59%
மொத்தம் 64,512 2.77% 4
மூலம்:[3]

1956 நாடாளுமன்றத் தேர்தல்

1956 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டது, தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு, 8,914 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்

மார்ச் 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதி வாக்குகள் % இருக்கைகள் வாக்குவீதம் காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி 6,930 32.52% 0 83.20%
யாழ்ப்பாணம் 5,312 30.56% 0 71.91%
காங்கேசன்துறை 1,448 7.23% 0 71.22%
கோப்பாய் 4,936 23.35% 0 77.13%
நல்லூர் 6,808 34.82% 0 73.12%
பருத்தித்துறை 2,521 17.91% 0 73.33%
உடுப்பிட்டி 7,365 34.70% 1 74.84% மு. சிவசிதம்பரம்
வட்டுக்கோட்டை 2,955 13.72% 0 75.37%
மொத்தம் 38,275 1.32% 1
மூலம்:[5]

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்

சூலை 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.[6] மு. சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்டு 9,080 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவானார்.

மேற்கோள்கள்