அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
சுருக்கம் | ABVP / எபிவிபி |
---|---|
உருவாக்கம் | 1948 |
வகை | மாணவர் அமைப்பு |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
தேசியத் தலைவர் | டாக்டர்.சுப்பையா சண்முகம். |
தேசியப் பொதுச் செயலர் | செல்வி.நிதி த்ரிபாதி |
அமைப்புச் செயலர் | ஆஷிஷ் சவுகான் |
மைய அமைப்பு | ராஷ்ட்டிரிய சகஸ்திரசக்தி (Rashtriya Chhatrashakti) |
வலைத்தளம் | www |
அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (எபிவிபி) - (Akhil Bharatiya Vidyarthi Parishad-ABVP) (ஆங்கில மொழி: All Indian Student Council), வலதுசாரி சிந்தனை கொண்ட கல்வி நிலைய மாணவர்களின் அகில இந்திய அமைப்பாகும். இவ்வமைப்பின் பெயரை சுருக்கமாக "எபிவிபி" என்று அழைப்பர். இவ்வமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகச் செயல்படுகிறது.[1].[2]
வரலாறு
இவ்வமைப்பு 1948இல் துவக்கி, 9 சூலை 1949இல் பதிவு செய்யப்பட்டது. 1958இல் மும்பைக் கல்லூரி பேராசிரியர் யஷ்வந்தராவ் கேல்கர் இவ்வமைப்பினை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றினார். [3].இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களில் எபிவிபி அமைப்பின் கிளைகள் தொடங்கப்பட்டது.[4]ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின், மாணவர் அணியாக எபிவிபி செயல்படுகிறது.[5][6] பாரதிய ஜனதா கட்சியின் இளஞர் அமைப்புடன் செயல்படுகிறது.[7][8]
எபிவிபி-யால் துவக்கப்பட்ட துணை அமைப்புகள்
- உலக மாணவர்கள் & இளைஞர்கள் அமைப்பு (WOSY)
- மாணவர்களுக்கான வளர்ச்சி அமைப்பு (SFD)[9]
- மாநிலங்களுக்கிடையே மாணவர்களின் அனுபவ வாழ்க்கை (SEIL)
நூல் வெளியிடுகள்
மாதந்தோறும் புது தில்லியிலிருந்து இந்தியில் வெளியாகும் "ராஷ்டிரிய சாத்திரசக்தி" இதழ் எபிவிபியின் அலுவல்முறை வெளியீடாகும்[10] வெவ்வேறு தேசிய விவகாரங்கள் குறித்தும் எபிவிபி துண்டறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
படக்காட்சியகம்
-
எபிவிபி பேரணி
-
எபிவிபி மாநாடு
-
எபிவிபி போராட்டப் பேரணி
Rss Students Organisation
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Foundation; retrieved 31 March 2011
- ↑ [1] retrieved on 5 September 2014
- ↑ "ABVP history". Abvp.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
- ↑ "ABVP largest in world". Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
- ↑ "ABVP not a student wing of mim". Indiatoday.intoday.in. 2011-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
- ↑ "ABVP leaders". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
- ↑ Protests by BJYM, ABVP mar ICET counselling
- ↑ "BJYM, ABVP protest against incursion by Chinese". Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
- ↑ "SFD a forum of ABVP". Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
- ↑ "Обновление FLV Player". Abvp.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
மேலும் படிக்க
- ABVP (2005-12-24). "Resolutions". Archived from the original on 2014-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-04-07.
- "ABVP urges policy to stop commercialisation of education". Deccan Herald. 2005-12-24. http://www.deccanherald.com/deccanherald/may022004/d11.asp.
- "ABVP Karyakartas take up Tsunami Relief Work" இம் மூலத்தில் இருந்து 2006-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060523173807/http://www.abvp.org/testing/abvp1/index1.php.
- "ABVP protests against attacks on Indians in Australia". http://www.hindujagruti.org/news/7111.html.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ABVP Delhi website பரணிடப்பட்டது 2010-07-05 at the வந்தவழி இயந்திரம்
- ABVP Andhra Pradesh website பரணிடப்பட்டது 2007-10-23 at the வந்தவழி இயந்திரம்