அசோகச் சக்கர விருது
அசோகச் சக்கரம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | அமைதிக்கால வீரச்செயல் | |
பகுப்பு | தேசிய வீரம் | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
முந்தைய பெயர்(கள்) | அசோகச் சக்கரம், முதலாம் வகுப்பு (1967 வரை) | |
விருது தரவரிசை | ||
இல்லை ← அசோகச் சக்கரம் → கீர்த்தி சக்கரம் |
இந்தக் கட்டுரை அசோகச் சக்கரம் விருது குறித்தானது. இந்திய அரசு இலச்சினை, அசோகச் சக்கரத்தினைக் குறித்த தகவல்கள் அறிய காண்க: அசோகச் சக்கரம்.
அசோகச் சக்கரம் (Ashoka Chakra) இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன.[1] இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் பெற தடை இல்லை.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
வெளி இணைப்புகள்
- Ashok Chakra at Indian Army website
- Bharat Rakshak Page on Ashoka Chakra பரணிடப்பட்டது 2004-12-24 at the வந்தவழி இயந்திரம்
- Ashoka Chakra awardees of the Indian Air Force[தொடர்பிழந்த இணைப்பு]