அணுக்கரு விசை

நடுநிலையான பையோன் (pion) மூலம் கடுமையான நியூத்திரன்-புரோத்தன் இடைத்தாக்கத்தைக் காட்டும் பெயின்மான் வரைபடம்

அணுக்கரு விசை (Nuclear force) எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருனிகளுக்கிடையே ஏற்படும் விசை ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோட்டான்களையும் மின்னூட்டம் அற்ற நியூட்ரான்களையும் பிணைக்க வைக்கின்றது.[1][2][3]

வரலாறு

1932 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் சாட்விக் என்பவரால் நியூட்டாரன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அணுக்கரு விசை அணுக்கருவியலில் முக்கியத்துவம் பெற்றது.

1935 ஆம் ஆண்டில் ஹிடெக்கி யுக்காவா என்பவர் அணுக்கரு விசை பற்றி முதன் முதலாக எடுத்துக் கூறினார். அவரது கூற்றுப்படி, இரு அணுக்கருனிகளுக்கிடையே தொடர்ந்தாற் போல் போசோன்கள் (மீசோன்கள்) என்ற துகள் பரிமாற்றம் நடைபெறுகிறது. எனினும், மீசோன் தத்துவம் தற்போது இவ்விசையின் அடிப்படைக் கொள்கை என ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், இந்த மீசோன் துகள் பரிமாற்றக் கொள்கை "நியூட்ரான்-நியூட்ரான்" அழுத்தத்தின் நேரடியான சோதனைகளுக்கு இக்கொள்கை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.

அணுக்கரு விசையின் அடிப்படை இயல்புகள்

  • அணுக்கரு விசையானது ஹாட்ரோன்களுக்கு (Hadron) இடையே மட்டுமே உணரப்படுகிறது.
  • அணுக்கருவிசை குறுகிய நெடுக்கம் கொண்டவை. இரு அணுக்கருனிகள் கிட்டத்தட்ட 1.7 fm தொலைவில் இருந்தால் மட்டுமே அவைகளுக்கிடையே அணுக்கருவிசை காணப்படும். இதைவிட அதிக தூரத்தில் இருந்தால் இவ்விசை புறக்கணிக்கத்தக்கது.
  • குறைந்த தூரத்தில் கூலும் விசையை விட அணுக்கரு விசை அதிகமானதாகும். எனவே புரோட்டான்களுக்கிடையே ஏற்படும் கூலும் விலக்கலை விட இவ்விசை அதிகமாகச் செயற்படுகிறது. எனினும், புரோட்டான்களுக்கிடையே உள்ள தூரம் 2.5 fm தூரத்தை விட அதிகமாக இருக்கும் போது கூலலும் விசையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

மேற்கோள்கள்

  1. Reid, R. V. (1968). "Local phenomenological nucleon–nucleon potentials". Annals of Physics 50 (3): 411–448. doi:10.1016/0003-4916(68)90126-7. Bibcode: 1968AnPhy..50..411R. 
  2. Kenneth S. Krane (1988). Introductory Nuclear Physics. Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80553-X.
  3. Binding Energy, Mass Defect, Furry Elephant physics educational site, retrieved 2012-07-01.