அனாக் புக்கிட் தொடருந்து நிலையம்


அனாக் புக்கிட் தொடருந்து நிலையம்
Anak Bukit Railway Station
அனாக் புக்கிட் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அனாக் புக்கிட், பெர்லிஸ், மலேசியா
ஆள்கூறுகள்6°11′00″N 100°22′30″E / 6.1834°N 100.3749°E / 6.1834; 100.3749
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம்
நடைமேடை3 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டது1917
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   அனாக் புக்கிட்   அடுத்த நிலையம்
கொடியாங்
    அலோர் ஸ்டார்
ஆராவ்
 
  Gold  
  அலோர் ஸ்டார்
அமைவிடம்
அனாக் புக்கிட் தொடருந்து நிலையம்


அனாக் புக்கிட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Anak Bukit Railway Station மலாய்: Stesen Keretapi Anak Bukit); சீனம்: 阿纳武吉火车站) என்பது தீபகற்ப மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் அனாக் புக்கிட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அனாக் புக்கிட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பெர்லிஸ் மாநிலத்தின் ஜித்ரா நகரத்திற்கு அருகில் உள்ளது.

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனாக் புக்கிட் நகரில் இந்தப் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]

பொது

இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்து சேவை; கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. இந்த நிலையம் சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ளது.

சிற்றுந்து வாகனங்களின் மூலம் 5 முதல் 8 நிமிடங்களுக்குள் வானூர்தி நிலையத்தை அடைந்து விடலாம். இந்த வானூர்தி நிலையமும் ஜித்ரா நகரத்திற்கு அருகில் உள்ளது.[1]

அனாக் புக்கிட் நகரம்

அனாக் புக்கிட் (Anak Bukit) மலேசியா, கெடா மாநிலத்தின் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. கெடா மாநில சுல்தான் அவர்களின் அரண்மனை இங்குதான் அமைந்து உள்ளது. கோலா கெடா நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்து இருக்கும் இந்த நகரத்திற்கு அருகில் அலோர் மேரா மற்றும் கெப்பாலா பத்தாஸ் நகரங்கள் உள்ளன.

கெடாவின் அரச அரண்மனை இங்கு அமைந்து இருப்பதால் இந்த நகரம் கெடாவின் அரச நகரம் என்று அழைக்கப் படுகிறது. மலேசியாவின் முன்னாள் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலீம் முவாடாம் சாவின் பிறப்பிடமாகவும் அறியப் படுகிறது. [3]

அனாக் புக்கிட் அரண்மனை

2007-ஆம் ஆண்டில் இந்த அரண்மனை 70 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 1000 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் 1400 பேர் அமருவதற்கான மாற்றங்கள் செய்யப் பட்டன. 2008-ஆம் ஆண்டில் அந்த மண்டபத்தில் கெடா சுல்தானின் 50-வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.[4]

1958-ஆம் ஆண்டில் சுல்தான் பாட்லிஷா காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய புதல்வரும் இப்போதைய சுல்தானுமாகிய அப்துல் ஹலீம் முவாடாம் சா, 1959 பிப்ரவரி 20-ஆம் தேதி, கெடாவின் 27-ஆவது சுல்தானாக அரியணை ஏறினார்.

அரண்மனையின் பின்புறத்தில் சுங்கை அனாக் புக்கிட் என்று அழைக்கப்படும் ஓர் ஆறு ஓடுகிறது. இந்த ஆறு சுங்கை கெடா என்று அழைக்கப்படும் கெடா ஆற்றுடன் இணைந்து அலோர் ஸ்டார் வழியாக கோலா கெடா சமவெளியில் பாய்கிறது.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்