அனைத்துலக சீர்தரம்

'என்றிமாட்சுலே', 1800, முதல் சீர்தரம்:முறுக்காணி சீர்தரம்

அனைத்துலக சீர்தரம் (International standard) என்பது அனைத்துலக சீர்தர அமைப்புகளினால் வரையறைக்கப்படும் சீர்தரங்கள் ஆகும். இந்த சீர்தரங்கள், அனைத்து நாடுகளின் சீரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, உருவாக்கப்பட்டு, அனைவராலும் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் பின்பற்றப்பட சீர்தரங்கள் உருவாக்கப்பட்டு, அவையும் பிறநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டு, பின்பு அந்தந்த நாடுகளில் மட்டும் நடைமுறை படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியத் தர நிர்ணய அமைவனம் என்பது இந்தியாவில் மட்டும் பின்பற்றப்படும் சீர்தரம் ஆகும். அதே வகையில், பல சீர்தரங்கள் உலகில் உள்ள நாடுகளுக்கு பொதுவாகத் தேவைப்படுகின்றன. அவையும் கூட்டாக உருவாக்கப்பட்டு, அனைவராலும், அனைத்து நாடுகளும் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அனைத்துலக மின்தொழினுட்ப ஆணையம் (International Electrotechnical Commission), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் என்பனவற்றைக் கூறலாம். 'என்றிமாட்சுலே' (Henry_Maudslay) என்பவர் முறுக்காணிகளுக்குரிய சீர்தரங்களை, 1800 ஆம் ஆண்டு உருவாக்கி, தொழிற்புரட்சியின் வேகத்தினை அதிகப்படுத்தினார்.[1] கிராம்டன்(R. E. B. Crompton) என்பவர் 1906 ஆம் ஆண்டு அனைத்துலக மின்தொழினுட்ப விதிகளை உருவாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடித்தளம் வகுத்தார்.[2]

மேற்கோள்கள்