அபிசேக் சர்மா

அபிசேக் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு4 செப்டம்பர் 2000 (2000-09-04) (அகவை 24)
அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–தற்போதுபஞ்சாப்
2018டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 4)
2019–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 18)
மூலம்: கிரிக்கெட் ஆர்க்கைவ், 19 ஏப்ரல் 2023

அபிசேக் சர்மா (பிறப்பு 4 செப்டம்பர் 2000) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் . [1] அவர் 25 பிப்ரவரி 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே கோப்பைத்தொடரில் பஞ்சாப் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [2] அவர் 6 அக்டோபர் 2017 அன்று 2017-18 ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [3]

டிசம்பர் 2017 இல், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். [4]

உள்ளூர்ப் போட்டிகள்

ஜனவரி 2018 இல், அவர் 2018 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸால் ரூ 5.5 மில்லியனுக்கு வாங்கப்பட்டார். [5] [6] [7] 12 மே 2018 அன்று, அவர் தனது இருபது20 அறிமுகப் போட்டியில் 2018 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி 19 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். [8] 28 பிப்ரவரி 2021 அன்று மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடி, பட்டியல் அ துடுப்பாட்டத்தில் 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர்களில் பட்டியல் அ போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற வீரர் ஆனார். [9] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். [10] [11] 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில், அவர் 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 426 ஓட்டங்கள் எடுத்தார் [12]

மேற்கோள்கள்

  1. "Abhishek Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
  2. "Vijay Hazare Trophy, Group A: Punjab vs Vidharbha at Delhi, Feb 25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
  3. "Group D, Ranji Trophy at Dharamsala, Oct 6-9 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  4. "Prithvi Shaw to lead India in Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  5. "IPL Auction 2018 - Abhishek Sharma| Cricbuzz.com". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
  6. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  7. "U19 World Cup stars snapped up in IPL auction". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  8. "45th match (N), Indian Premier League at Delhi, May 12 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
  9. "The ACS – The ACS" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  10. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  11. Jha, Yash (24 March 2022). "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  12. "Mens Team | IPLT20". www.iplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.

வெளி இணைப்புகள்