அரசு நிஜாமியா திப்பி கல்லூரி

அரசு நிஜாமியா திப்பி கல்லூரி
Government Nizamia Tibbi College
வகையூனானி மருத்துவக் கல்லூரி
உருவாக்கம்1810
அமைவிடம்
ஐதராபாத்து, மொகல்புரா
, , ,
500002
,
17°21′38″N 78°28′30″E / 17.3605319°N 78.4750474°E / 17.3605319; 78.4750474
வளாகம்சார்மினார் அருகில்
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி is located in தெலங்காணா
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி
Location in தெலங்காணா
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி is located in இந்தியா
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி (இந்தியா)

அரசு நிஜாமியா திப்பி கல்லூரி (Government Nizamia Tibbi College) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு யூனானி மருத்துவக் கல்லூரி ஆகும்.[1][2][3]

இக்கல்லூரியுடன் மருத்துவமனை உள்ளது. சிகிச்சைக்காகத் தயாரிக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் மருத்துவ மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இக்கல்லூரி ஒரு இளநிலை மருத்துவப் படிப்பை (யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) வழங்குகிறது. இது தவிர, கல்லூரி முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.

வரலாறு

அரசு நிஜாமிய திப்பி கல்லூரியின் வரலாறு 1810ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. இது ஆப்கானிய அறிஞர் சாஜிதா பேகம் மஜித் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர், ஏழாவது நிஜாம் ஒசுமான் அலி கானால் 1938-ல் புதுப்பிக்கப்பட்டது.

கல்லூரி

ஐதராபாத்தில் உள்ள சார்மினார் என்ற இடத்தில் அரசு நிஜாமியா திப்பி கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியானது இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வி

கல்லூரியில் வழங்கப்படும் முக்கிய இளநிலை படிப்பு இளநிலை யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பாடமாகும்.[4] கூடுதலாக, கல்லூரி முதுநிலை மருத்துவப் படிப்பையும் வழங்குகிறது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்