அர்குன்

 

அர்குன்
அரியணையில் தன் கதுனுடன் அர்குன் (குதுலுக் கதுனாக இருக்க வாய்ப்பு அதிகம்)
ஈல்கான்
ஆட்சிக்காலம்11 ஆகத்து 1284 – 12 மார்ச் 1291
குப்லாய் உறுதி செய்தார்23 பெப்ரவரி 1286
முன்னையவர்தேகுதர்
பின்னையவர்கய்கது
பிறப்பு(1258-03-08)8 மார்ச்சு 1258
பய்லகன்
இறப்புமார்ச்சு 10, 1291(1291-03-10) (அகவை 33)
பக்சா, அர்ரான்
புதைத்த இடம்12 மார்ச் 1291
சோஜாசுக்கு அருகில்
துணைவர்குத்லுக் கதுன்
உருக் கதுன்
தோடை கதுன்
சல்யூக் கதுன்
புலுகான் கதுன்
குதை கதுன்
புலுகான் கதுன்
குல்தக் அகாச்சி
அர்கானா அகாச்சி
ஒல்ஜடை கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
கசன்
ஒல்ஜைடு
அரசமரபுபோர்சிசின்
தந்தைஅபகா
தாய்கைத்மிஷ் எகேச்சி
மதம்பௌத்தம்

அர்குன் கான் என்பவர் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசின் நான்காவது ஆட்சியாளர் ஆவார். இவர் 1284 முதல் 1291 வரை ஆட்சிபுரிந்தார். இவர் அபகா கானின் மகன் ஆவார். இவரது தந்தையைப் போலவே இவர் ஒரு பக்தியுடைய பௌத்தராக விளங்கினார். திருநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்து ஐரோப்பாவிற்குப் பல தூதுக்குழுக்களை இவர் அனுப்பினார். ஆனால் இவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இவர் தனது பெரிய தாத்தா குப்லாய் கானிடம் ஒரு புது மணப் பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அந்த இளம் கோகோசினை ஆசியா வழியாக அர்குனிடம் கொண்டு வரும் பொறுப்பு மார்க்கோ போலோவால் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கோகோசின் வருவதற்கு முன்னரே அர்குன் இறந்துவிட்டார். எனவே கோகோசின் அர்குனின் மகன் கசனைத் திருமணம் செய்து கொண்டார்.[1][2]

குதிரையில் அபகா கான். அவரது மகன் அர்குன் குடையின் கீழ் தன் மகன் மகமுது கசனைக் கையில் வைத்துள்ளார். ரசீத்தல்தீன் அமாதனியின் 14ஆம் நூற்றாண்டு நூல்.

குறிப்புகள்

  1. Date was converted to Gregorian by Charles Melville. See: Melville, Charles (1994) - The Chinese-Uighur Animal Calendar in Persian Historiography of the Mongol Period
  2. "ARḠŪN KHAN – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.