ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

சுருக்கம்ஆசியாட் (Asiad)
முதல் நிகழ்வு1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், புது தில்லி, இந்தியா
ஒவ்வொரு4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
கடைசி நிகழ்வு2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காங்சூ, சீனா
காரணம்ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான பன்முக விளையாட்டுப் போட்டி நிகழ்வு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் ஆசியாட் (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பதினோரு நாடுகள் பங்கு கொண்ட முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரான புது தில்லியில் நடைபெற்றறது.

வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆசியாவின் பல பகுதிகள் சுதந்திர நாடுகளாக மாறின. 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆசிய நாடுகளிடையே ஒரு விளையாட்டு போட்டியை நடத்த சீனா மற்றும் பிலிப்பைன்சு இடையே ஒரு உரையாடல் தொடங்கியது. இந்திய சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதியான குரு தத் சோந்தி ஆசிய விளயாட்டுகளால் ஒற்றுமை மேம்படும் என நம்பினார். இவரின் யோசனையின் கீழ் ஆசிய தடகள கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த புதிய அமைப்பிற்கான சாசனத்தை உருவாக்க ஆயத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, ஆசிய தடகள சம்மேளனம் முறைப்படி தொடங்கப்பட்டது. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரான புது தில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[1] இதில் பதினோரு நாடுகள் பங்கேற்றன. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நவம்பர் 1981 இல் உருவாக்கப்பட்டது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்டு வந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் இனி இந்த புதிய அமைப்பால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.[2]

சின்னங்கள்

ஆசிய விளையாட்டு இயக்கம் ஆசிய விளையாட்டு சாசனத்தில் பொதிந்துள்ள இலட்சியங்களைக் குறிக்க சின்னங்களைப் பயன்படுத்துகிறது. 1949 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் குரு தத் சோந்தியால் வடிவமைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட ஆசிய விளையாட்டுப் பொன்மொழி "எவர் ஆன்வார்ட்" ஆகும். ஆசிய விளையாட்டு சின்னம் ஒரு வெள்ளை வட்டத்தை சுற்றி ௧௬ சிவப்பு நிற கதிர்களை கொண்டுள்ளது.

பங்கேற்பு

1951 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சில் உடன் இணைந்த அனைத்து 45 உறுப்பினர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.[3] வரலாற்றில், 46 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் போட்டியாளர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பியுள்ளன. இஸ்ரேல் 1976 ஆம் ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.[4] உலகின் எல்லா நாடுகளாலும் அங்கீகரிக்கப்படாத தைவான், பாலஸ்தீனம் மற்றும் சீனாவின் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனி நாடுகளாக பங்கேற்கின்றன. தைவான் 1990 முதல் சீன தைபே கொடியின் கீழ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது. 2007 ஆம் ஆண்டில், ஆத்திரேலியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த போதிலும், அது ஆசிய விளையாட்டு அமைப்பால் நிராகரிக்கப்பட்டது.[5] [6] இந்தியா, இந்தோனேசியா, சப்பான், பிலிப்பைன்சு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் மட்டுமே இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் போட்டியிட்டுள்ளன.

பதக்க பட்டியல்

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 CHN167411057913570
2 JPN1084110410543242
3 KOR7877229162425
4 IRI192202217611
5 IND183239357779
6 KAZ165180292637
7 THA144189311644
8 PRK121161188470
9 TPE118164304586
10 UZB105138171414
மொத்தம் (10 நாடுs)45734204460113378

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்