ஆப்கானிஸ்தானின் கலாசாரம்

ஆப்கானிஸ்தானின் கலாச்சாரம் (culture of Afghanistan)மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கலாச்சாரமாகும். கிமு 500 இல் அக்காமனிசியப் பேரரசின் காலத்தில் சாதனை படைத்தது.[1] ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளான தாரி மற்றும் பஷ்தூவில் "ஆப்கானியர்களின் நிலம்" அல்லது "ஆப்கானியர்களின் இடம்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[2] இது பெரும்பாலும் ஒரு பழங்குடி சமூகமாகும், இது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அதன் சொந்த துணை கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஆப்கானியர்கள் பின்பற்றும் இஸ்லாமிய மரபுகள், அதே விடுமுறை கொண்டாட்டங்கள், அதே ஆப்கான் உடைகள், எடுத்துக்கொள்ளும் உணவு, கேட்கப்படும் இசை மற்றும் பன்மொழிப் புலமை போன்றவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உள்ளன.

தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திலும், வரலாற்று ரீதியாக ஆப்கானிஸ்தானின் பகுதியாக இருந்த மேற்கு பாகிஸ்தானிலும், பஷ்துன்வலியைப் பின்பற்றுவதன் மூலம் பஷ்டூன் கலாச்சாரத்தின் படி பஷ்தூன் மக்கள் வாழ்கின்றனர் (அதாவது "பஷ்டூன்களின் வழி"யைப் பின்பற்றுபவர்கள்).[3] ஆப்கானிஸ்தானின் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் அண்டை நாடுகளான நடு ஆசியா மற்றும் ஈரானின் கலாச்சாரங்களால் பாதிக்கப்படுகின்றன.[4][5] சில பஷ்தூன் அல்லாதவர்கள் பஷ்டூன்களுடன் அருகிலேயே வசிக்கிறார்கள். இவர்கள் பஷ்துன்வலி எனப்படுகின்ற செயலாக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இந்த முறை "பஷ்துனையாக்கம்" (அல்லது ஆப்கானியாக்கம்) எனப்படுகிறது. மற்றும், சில பஷ்டூன்களுடன் சேர்ந்து இங்குள்ள பலர் தாரி-பர்ஸியன் மொழியை பேசக் கற்றுக் கொள்கின்றனர்.

கலை மற்றும் இசை

ஆப்கானிஸ்தானின் நிலங்கள் கலைக்கு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன, உலகின் பழமையான பயன்பாடுகளில் ஒன்றான குகைச் சுவரோவியங்களில் காணப்படும் நெய்யோவியம் .[6][7] இங்கு காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானின் குறிப்பிடத்தக்க ஓவியக்கலை பாணியான காந்தார கலையிலிருந்து கிரேக்க-ரோமன் கலை மற்றும் புத்த கலை ஒன்று மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையே தோன்றியது.[8] பிற்காலங்களில் பாரசீக மினியேச்சர் பாணியின் பயன்பாடு அதிகரித்தது, ஹெறாத் நகரத்தின் கமால் உத்-டான் பெஹ்சாத் என்பவர் திமுரிட் மற்றும் ஆரம்பகால சஃபாவிட் காலங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க மினியேச்சர் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். 1900 களில் இருந்து, தேசம் மேற்கத்திய நுட்பங்களை கலையில் பயன்படுத்தத் தொடங்கியது. அப்துல் கஃபூர் ப்ரெஷ்னா 20 ஆம் நூற்றாண்டில் காபூலில் இருந்து வந்த ஒரு பிரபல ஆப்கானிய ஓவியர் மற்றும் ஓவியக் கலைஞர் ஆவார்.

ஆப்கானிஸ்தானின் கலை முதலில் ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டது, ஆனால் சமீபத்தில் பெண்கள் காபூல் பல்கலைக்கழகத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்களிக்கிறார்கள். கலை பெரும்பாலும் ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகம், ஆப்கானிஸ்தானின் தேசிய தொகுப்பு மற்றும் காபூலில் உள்ள ஆப்கானிஸ்தானின் தேசிய ஆவணக்காப்பகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஏராளமான கலைப் பள்ளிகள் உள்ளன. காபூலில் உள்ள தற்கால கலை ஆப்கானிஸ்தான் மையம் (சி.சி.ஏ.ஏ) இளைஞர்களுக்கு சமகால ஓவியங்களைக் கற்க வழி வகுக்கிறது.

பாரம்பரியமாக, பெண்கள் மட்டுமே நாடக நடிப்பில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், நாடக கலைகளில், பெண்கள் மைய அரங்கில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளனர்.[9]

நாட்டில் அறியப்பட்ட பிற கலை வடிவங்கள் இசை, கவிதை மற்றும் பல ஆப்கானிஸ்தான் விளையாட்டுகள் ஆகும். .இங்கு, தரைவிரிப்புகளை உருவாக்கும் கலை பல நூற்றாண்டுகளாக முக்கியமானதாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அழகான ஓரியண்டல் விரிப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்றது. ஆப்கான் கம்பளத்திற்கு ஆப்கானிஸ்தானில் தனித்துவமான சில அச்சிட்டுகள் உள்ளன.

கட்டிடக்கலை

இப்பகுதி உலகின் கட்டிடக்கலைக்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளது. உலக பாரம்பரிய தளங்களான தலிபான்களால் அழிக்கப்பட்ட புகழ்பெற்ற புத்தர்களின் இல்லமான ஜாம் மினாரெட்டையும், பமியன் பள்ளத்தாக்கையும் அறிவிப்பதன் மூலம் ஆப்கானிஸ்தானின் பங்கை யுனெஸ்கோ ஒப்புக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Country Profile: Afghanistan" (PDF). Library of Congress Country Studies on Afghanistan. August 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  2. "Article Sixteen of the Constitution of Afghanistan". 2004. Archived from the original on அக்டோபர் 28, 2013. பார்க்கப்பட்ட நாள் June 13, 2012. From among the languages of Pashto, Dari, Uzbeki, Turkmani, Baluchi, Pashai, Nuristani, Pamiri (alsana), Arab and other languages spoken in the country, Pashto and Dari are the official languages of the state.
  3. US Library of Congress: Afghanistan - Ethnic Groups (Pashtun)
  4. "MAPS: AFGHANISTAN'S ETHNO-LINGUISTIC GROUPS". Institute For The Study Of War. பார்க்கப்பட்ட நாள் 2010-09-25.
  5. "Map showing ethnolinguistics groups of Afghanistan". National Geographic Society. 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-09-25.
  6. "First-ever oil paintings found in Afghanistan". CNN. April 24, 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
  7. "World's Oldest Oil Paintings Found in Afghanistan". Fox News. April 24, 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
  8. "Gandhara art". Britannica. பார்க்கப்பட்ட நாள் 2018-08-22.
  9. The Christian Science Monitor: Risky revival of Afghan theater puts women center stage

வெளி இணைப்புகள்