ஆப்பு

ஆப்பு
மரம் பிளக்கும் ஆப்பு
வகைப்பாடு கைக்கருவி
துணைக் கருவி சம்மட்டி
தொடர்புள்ளவை உளி
வல்லிட்டுக்குற்றி
கோடரி

ஆப்பு ஒரு முக்கோண வடிவிலான கருவி. எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாய்தளம் ஆகிய இது எளிய பொறி வகைகளுள் ஒன்று. இது பொருள்களைப் பிரிப்பதற்கும், ஒரு பொருளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கும், பொருளொன்றை உயர்த்துவதற்கும், ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் தாங்கி வைத்திருப்பதற்கும் ஆப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் அகன்ற முனையில் கொடுபடும் விசையை அதன் சாய்ந்த மேற்பரப்புகளுக்குச் செங்குத்துத் திசையில் மாற்றுவதன் மூலம் இது செயற்படுகிறது. ஆப்பொன்றின் பொறிமுறைநயம் அதன் நீளத்துக்கும் தடிப்புக்கும் இடையிலான விகிதத்தில் தங்கியுள்ளது. குறைந்த நீளமும் கூடிய தடிப்பும் கொண்ட ஆப்பினால் விரைவாக வேலையைச் செய்ய முடியும் எனினும், இதற்குக் கூடிய விசையைக் கொடுக்கவேண்டி இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Wedges and screws, retrieved 2009-07-29.
  2. Bowser, Edward Albert (1884), An elementary treatise on analytic mechanics: with numerous examples, D. Van Nostrand Company, pp. 202–203.
  3. McGraw-Hill Concise Encyclopedia of Science & Technology, Third Ed., Sybil P. Parker, ed., McGraw-Hill, Inc., 1992, p. 2041.