ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஆருர் அரநெறி
பெயர்:ஆருர் அரநெறி அகிலேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாரூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகிலேசுவரர்
தாயார்:வண்டார்குழலி, புவனேசுவரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

ஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.

வழிபட்டோர்

இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது.

சிறப்பு

அசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.[2] இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.640
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 354

இவற்றையும் பார்க்க