ஆற்றிங்கல்
ஆற்றிங்கல்
Attingal | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 35,648 |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 695101 |
தொலைபேசிக் குறியீடு | 0470 |
வாகனப் பதிவு | KL-16 |
ஆற்றிங்கல் என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்றாகும். இது சிறையிகீழ் வட்டத்திற்கு உட்பட்டது ஆகும். விரிவுபடுத்தப்பட்ட திருவனந்தபுரம் பெருநகர்ப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆற்றிங்கல் என்ற சொல்லை மலையாளிகள் ஆட்டிங்கல் என்று உச்சரிப்பார்கள்.
இது ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 47, இந்த ஊரின் வழியாக செல்கிறது. 7 கிலோமீட்டருக்கு அப்பால் சிறையின்கீழ் ரயில் நிலையம் உள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கு பிறந்தவர்கள்
- டி. வி. குமுதினி, நடிகை
சான்றுகள்
- ↑ "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-30. பார்க்கப்பட்ட நாள் 2008-10-21.