ஆல்ஃபெல்டைட்டு

ஆல்ஃபெல்டைட்டு
Ahlfeldite
ஆல்பிரட்பெட்ரோவைட்டு, ஆல்ஃபெல்டைட்டு, சால்கோமெனைட்டு
பொதுவானாவை
வகைசெலீனைட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Ni,Co)SeO3·2H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2][3]

ஆல்ஃபெல்டைட்டு (Ahlfeldite) என்பது ((Ni, Co)SeO3]·2H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் இரண்டாம் நிலை தோற்ற கனிமமாக இது கருதப்படுகிறது. 1892–1982 காலத்தில் வாழ்ந்த செருமன்-பொலிவியன் சுரங்கப் பொறியியலாளரும் புவியியலருமான பிரடெரிக் ஆல்ஃபெல்ட்டு கண்டுபிடித்ததன் காரணமாக கனிமத்திற்கு ஆல்ஃபெல்டைட்டு எனப் பெயரிடப்பட்டது. பொலிவியா நாட்டிலுள்ள விர்ச்சென் டி சுருமி சுரங்கம், பகாயேக்கு கனியன், சாயந்தா மாகாணம், பொட்டோசி துறை ஆகிய பகுதிகளில் இது கிடைக்கிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்ஃபெல்டைட்டு கனிமத்தை Afe[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "Webmineral.com - Ahlfeldite".
  2. "Mindat.org - Ahlfeldite".
  3. "Handbook of Mineralogy - Ahlfeldite" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.