ஆவணத் திரைப்படம்
ஆவணத் திரைப்படம் (Documentary film) என்பது நிகழ்வுகளை உண்மையான சூழலுக்கு அண்மையாக ஆவணப்படுத்த முயலும் நிகழ்பட ஆக்கங்கள் விவரணத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் என்று பொதுவாக வகைப்படுத்தப்படுகின்றன. துவக்கத்தில் இந்த வரையறை திரைச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அண்மைக்காலங்களில் காணொளி மற்றும் நவீன ஊடகங்களில் உருவாக்கப்படுபவனவிற்கும்,அவை நேரடி காட்சிப்படுத்தலாக இருப்பினும் அல்லது தொலைக்காட்சி தொடர்களாக இருப்பினும், பயனாகிறது. இத்துறை திரையாக்கம்,திரைக்கதை வடிவம் மற்றும் பார்வையாளரைச் சென்றடைதல் ஆகியவற்றில் தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வருகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Nichols, Bill. 'Foreword', in Barry Keith Grant and Jeannette Sloniowski (eds.) Documenting The Documentary: Close Readings of Documentary Film and Video. Detroit: Wayne State University Press, 1997
வெளியிணைப்புகள்
- Documentary Classics - Videography of essential documentary films via UC Berkeley Media Resources Center
- The Documentary Filmmakers Group, UK's largest documentary organisation
- Documentary Films .Net: news, reviews, and filmmaker resources
- International Documentary Association