இசிக் - குல் பிராந்தியம்
இசிக் - குல் பிராந்தியம்
Ысык-Көл облусу Isıq-Köl oblusu | |
---|---|
பிராந்தியம் | |
கிர்கிஸ்தானின் வரைபடத்தில் இசிக்-குல் பிராந்தியத்தின் அமைவிடம். இதில் இசிக்-குல் ஏரி நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது | |
ஆள்கூறுகள்: 42°0′N 78°0′E / 42.000°N 78.000°E | |
நாடு | கிர்கிசுத்தான் |
தலைநகரம் | காரகோல் |
அரசு | |
• குபர்னேட்டர் | மிர்பெக் அசனகுனோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 43,100 km2 (16,600 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 4,63,900 |
• அடர்த்தி | 11/km2 (28/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (East) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KG-Y |
மாவட்டங்கள் | 5 |
மாநகரங்கள் | 3 |
நகரியங்கள் | 5 |
சிற்றூர்கள் | 175 |
இசிக்-குல் பிராந்தியம் (Issyk-Kul Region, கிருகிசு மொழி Ысык-Көл облусу, ىسىق-وبلاستى) என்பது கிர்கிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் காரகோல் நகரமாகும். இதன் எல்லைகளாக அல்மாட்டி பிராந்தியம், கசக்கஸ்தான் (வடக்கு), சூய் பிராந்தியம் (மேற்கு), நாரன் பிராந்தியம் (தென்மேற்கு), சீனாவின் சிஞ்சியாங் (தென்கிழக்கு) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த பிராந்தியமானது உலகின் இரண்டாவது பெரிய உயரமான ஏரியான இசிக்-குல் ஏரியிலிருந்து ("சூடான ஏரி") இதன் பெயரைப் பெற்றது. [1]
நிலவியல்
தியான் சான் மலை அமைப்பின் முகடுகளால் சூழப்பட்ட கண் வடிவ இசிக்-குல் ஏரியானது வடபகுதியின் நிலப்பரப்பை ஆதிக்கம் செய்கிறது.
இப்பகுதியின் பெரும்பான்மையான மக்கள் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக ஏரியின் மேற்கு முனைக்கு அருகிலுள்ள பாலிச்சி நகரங்களிலும், அதன் கிழக்கு முனைக்கு அருகிலுள்ள கரகோல் நகரங்களிலும் வாழ்கின்றனர்.
அடிப்படை சமூக-பொருளாதார குறிகாட்டிகள்
- மாகாண மக்கள் தொகையானது 463,900 (1 ஜனவரி 2015 க்கான மதிப்பீடு) ஆகும். இதில் 130,800 நகர்ப்புற மற்றும் 333,100 கிராமப்புற மக்கள் தொகை அடங்கும். [2]
- வேலை வாய்ப்பு பெற்றவர்களின் தொகை: 180,300 (2008) [3]
- பதிவுசெய்யப்பட்ட வேலையற்ற மக்கள் தொகை: 4,902 (2008) [4]
- ஏற்றுமதி: 18.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008) [5]
- இறக்குமதி: 221.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
- நேரடி அந்நிய முதலீடுகள்: 1,1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008 இல்) [6]
மக்கள் வகைப்பாடு
2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, இசிக்-குல் பிராந்தியத்தில் மூன்று நகரங்கள், ஐந்து நகர்ப்புற வகை குடியிருப்புகள் மற்றும் 175 கிராமங்கள் உள்ளன. 2009 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின்படி, இதன் உண்மையான மற்றும் நிரந்தர மக்கள் தொகை 425,116 மற்றும் 438,389 ஆகும்.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1970 | 3,11,992 | — |
1979 | 3,52,017 | +12.8% |
1989 | 4,09,618 | +16.4% |
1999 | 4,15,513 | +1.4% |
2009 | 4,25,116 | +2.3% |
Note: de facto population; Source:[7] |
இன அமைப்பு
2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இசிக்-குல் பிராந்தியத்தின் இன அமைப்பின்படி மக்கள் தொகை:
இனக்குழு | மக்கள் தொகை | இசிக்-குல் பிராந்திய மக்கள்தொகையின் விகிதம் |
---|---|---|
கிர்கிசுகள் | 3,77,994 | 86.2% |
உருசியர்கள் | 35,275 | 8.0% |
கசக்குகள் | 6,464 | 1.5% |
உய்குர்கள் | 3,897 | 0.9% |
கல்மிக்குகள் ( சார்ட் கல்மிக்குகள் ) | 3,801 | 0.9% |
டங்கன்கள் | 3,124 | 0.7% |
உஸ்பெக்கியர் | 2,982 | 0.7% |
தாதர்கள் | 2,098 | 0.5% |
உக்ரைனியர் | 1,170 | 0.3% |
பிற குழுக்கள் | 1,584 | 0.3% |
போக்குவரத்து
வடமேற்கிலிருந்து ( பிசுக்கெக்கிலிருந்து ) வரும் தொடருந்துப் பாதை பாலிச்சியில் முடிகிறது. பிசுக்கெக்கிலிருந்து வரும் பிரதான நெடுஞ்சாலை (A365) பாலிக்கி வழியாக செல்கிறது. நெடுஞ்சாலை A363 ஏரியை சுற்றி வட்டமிட்டபடி செல்கிறது. மேலும் A362 சாலையானது ஏரியிலிருந்து கிழக்கே கஜகஸ்தானுக்கு செல்கிறது. இசிக்-குல் சர்வதேச விமான நிலையம் மற்றும் காரகோல் சர்வதேச விமான நிலையம் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியுடன் இப்பிராந்தியத்தை இணைக்கிறது . சோல்பன்-அடா விமான நிலையம் மற்றும் தம்கா விமான நிலையத்தில் வழக்கமான விமான பயணங்கள் இல்லை.
சுற்றுலா
ஆல்ப்ஸ் அல்லது கொலராடோவை ஒத்த இப்பகுதி ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக ஆக வாய்ப்பு உள்ளது. இதன் தொலைதூரத்தன்மை, வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பு மற்றும் கிர்கிஸ் தேசியவாதிகள் மற்றும் விடுதலை அமைப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் மோதல்கள் ஆகியவை இதற்கு தடை கல்லாக உள்ளன. 2008 திசம்பரில் வெடித்தத மோதலால், 39 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது, ஏரியைச் சுற்றியுள்ள சோவியத் கால கட்டுமானங்களை மிகவும் துணிச்சலான சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், பெரும்பாலும் உள்ளூர் மக்களாலும் பார்வையிடப்படுகிறது.
மாவட்டங்கள்
இஸ்ஸிக்-குல் நிர்வாக ரீதியாக ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: [8]
மாவட்டம் | தலைநகரம் | வரைபடம் |
---|---|---|
அக்-சூ மாவட்டம் | காரகோல் | |
ஜெட்டி-ஆகஸ் மாவட்டம் | கைசில்-சூ | |
டோங் மாவட்டம் | போகோன்பேவ் | |
டாப் மாவட்டம் | டப் | |
இசிக்-குல் மாவட்டம் | சோல்பன்-அட்டா |
காட்சியகம்
-
இசிக் குல், கிர்கிசுத்தான்
-
காரகோல் சிகரம்
-
சூரிய அஸ்தமனத்தில் இசிக்-குல் ஏரி
-
கிர்கிஸ்தானின் டெர்ஸ்கி ஆலா-டூ மலைகளில் உள்ள அல-குல் ஏரி
-
இசிக்-குல் ஏரி யின் வடக்குக் கரையிலும், காங்கே ஆலா-டூ மலைக்கும் இடையில் உள்ள பீடபூமி (டாம்சிக்கு அருகில்)
-
இசிக்-குல் பிராந்தியத்தின் டாம்ச்சி கிராமத்தில் ஒரு பள்ளிவாசல்
-
இசிக்-குல் ஏரியின் கரையில் ஒரு யூர்ட் முகாம்
குறிப்புகள்
- ↑ Baetov, Rasul (February 27, 2006). "Lake Issyk Kul - Experience and Lessons Learned Brief" (PDF). worldlakes.org. Archived from the original (PDF) on October 10, 2016. பார்க்கப்பட்ட நாள் May 3, 2020.
- ↑ "Численность населения областей, районов, городов и поселков городского типа Кыргызской Республики в 2015 г." [Population of regions, districts, cities and towns of the Kyrgyz Republic in 2015] (PDF). National Committee on Statistics. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
- ↑ National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 2010-11-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 2010-11-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ National Committee on Statistics (in Kyrgyz/Russian) பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "2009 population census of the Kyrgyz Republic: Issyk-Kul Region" (PDF). Archived from the original on 10 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
{cite web}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ Kyrgyzstan – Джалал-Абадская область பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம்