இசைத் தூண்டில்
இசைத் தூண்டில் (hook) பாப் இசையில் பாடல் "கேட்போரின் மனதைக் கவரும் வண்ணம் அமைய" சேர்க்கப்படும் ஓர் இசை வடிப்பு, பெரும்பாலும் ஒரு சிறிய இராகம், சரணம் அல்லது சிறிய இசைக்கோர்வை ஆகும். [1] இது பரவலாக ராக் இசை, ஹிப் ஹாப் இசை, மேற்கத்திய நடன இசை வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இசைவகைகளில், இசைத் தூண்டில்கள் வழமையாக கூட்டுப்பாடகர்களால் கொடுக்கப்படும். இசைத்தூண்டில்கள் மெல்லிசையாகவோ தாளகதியாகவோ இருக்கலாம்; வழமையாக இசையின் அடித்தளமாக அமைந்திருக்கும்.
மேற்கோள்கள்
- ↑ Covach, John (2005). "Form in Rock Music: A Primer". In Stein, Deborah (ed.). Engaging Music: Essays in Music Analysis. New York: Oxford University Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517010-5.