இடம் சாரா இலக்கணம்

ஒரு மொழியின் அனைத்து இலக்கண உருவகங்களும் V → w என்ற உருவாக்க முறையை பின்பற்றினால் அவ்விலக்கணம் இடம் சாரா இலக்கணம் (இ.சா.இ.) (Context Free Grammar) ஆகும். இங்கே V ஒரு non-terminal குறியாகவும், w ஒரு terminal அல்லது/அத்துடன் non-terminal குறிகளாகவும் இருக்கின்றன. ஒரே ஒரு உருவாக்க முறை இருப்பதால் இலக்கண விபரிப்பில் எந்த ஒரு இடத்திலும் V யை w ஆல் பிரதிநிதிபடுத்த முடியும், ஆகையால்தான் மேற்கண்ட இலக்கணத்தை இடம் சாரா இலக்கணம் என்பர். மொழியியலிலும் கணினியியலும் மேல் தந்த வரையறை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Brian W. Kernighan and Dennis M. Ritchie (Apr 1988). The C Programming Language. Prentice Hall Software Series (2nd ed.). Englewood Cliffs/NJ: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0131103628. Here: App.A
  2. Introduction to Automata Theory, Languages, and Computation, John E. Hopcroft, Rajeev Motwani, Jeffrey D. Ullman, Addison Wesley, 2001, p.191
  3. (Hopcroft & Ullman 1979), p. 106.

இடம் சாரா இலக்கணம் பேக்கஸ்-நார் முறை இலக்கண விபரிப்பு முறை கொண்டு பொதுவாக விபரிக்கப்படுகின்றது.