இடர் மேலாண்மை (நிதி)


நிதி நிலவரத்தை விளக்கும் பொழுது, ஹெட்ஜ் என்னும் ஆங்கில சொல் ஒரு சந்தையில் இருக்கும் நிலையாகும். இது எதிரே இருக்கும் சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களால் தனது சந்தையில் ஏற்படும் தேவையில்லாத ஆபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க உதவும் நிலையாகும். இந்த நிலையை அடைய நாம் காப்பீட்டு திட்டங்கள், இன்றைய நிலவரப்படி வருங்கால ஒப்பந்தங்கள் (forward contract), மாற்றங்கள், விருப்பங்கள், பலவகையான அனுமதிப்பெறாத சேமிப்பு மூலதனங்களின் பரிமாற்றங்கள் (over-the-counter), தனிமூலம் அல்லாத பொருட்கள், வருங்கால ஒப்பந்தங்கள் (futures contracts) ஆகியவற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். 1800 ஆம் ஆண்டில் முதன் முதல் வேளாண்மை சார்ந்த சொத்துக்களில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க உண்டாக்கிய பொது வருங்கால சந்தைகள் நாளடைவில் தனது சேவையை ஆற்றல், விலை உயர்ந்த உலோகங்கள், அந்நிய செலாவணி, வட்டி விகித ஏற்றத்தாழ்வுக்கும் நீட்டித்தன.[1][2][3]

எடுத்துக்காட்டுகள்

வேளாண்மை பொருள் விலை மாற்ற இடர் மேலாண்மை

ஒரு நல்ல உழவனை நாம் சரியான இடர் மேலாளர் என்று அழைக்கலாம். தேவை மற்றும் அளிப்பை பொருத்து சந்தையில் விற்கப்படும் கோதுமை மற்றும் மற்ற பயிர்களின் விலை ஏறி இறங்கும். தற்பொழுது உள்ள விலை நிலவரம் மற்றும் அறுவடை சமயத்தில் இருக்ககூடிய நிலவரத்தை முன்கூட்டியே அறிவதன் மூலம் ஒரு உழவன் தனக்கு ஏற்ற நெல்லை பயிரிடுகிறான். ஆனால் முன்னதாகவே அறிந்து கொள்ளும் தகவல் எல்லா நேரங்களிலும் பயனுள்ளதாக இருப்பதில்லை. ஒருமுறை பயிரிட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் முழுவதற்கும் அந்த உழவன் தான் பயிரிட்ட செடிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டி இருக்கிறது. உழவன் பயிரிடும் சமயத்தில் இருக்கும் விலையைவிட அறுவடை சமயத்தில் உயர்ந்திருந்தால் அவன் அதிக இலாபத்தைச் சம்பாதிக்கிறான். இல்லையேல் அவன் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

அந்த உழவன் அவன் பயிரிடும் சமயத்தில் அவனிடம் இருக்கும் நெல்லின் அளவுக்குச் சமமாக ஏராளமான வருங்கால நெல் ஒப்பந்தங்களை விற்பனை செய்தால், அவன் நெல்லின் விலையை குறப்பிட்ட காலம் வரை அப்படியே நிறுத்தி வைக்கிறான். இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் அவன் குறிப்பிட்ட அளவு நெல் மூட்டைகளை குறிப்பிட்ட தேதியில் கூறிய விலையில் விற்பனை செய்வான் என்பதை குறிக்கிறது. அவன் நெல் விலை மாற்றங்களினால் ஏற்படும் இடர்களில் இருந்து தன்னை காத்துக் கொண்டுள்ளான். இதை செய்தவுடன் அவன் விலை குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ அவன் கவலைப்படுவதில்லை. அவனுக்கு ஒப்பந்தப்படி கண்டிப்பாக வருவாய் வந்துவிடுகிறது. அறுவடை நேரத்தில் விலை சரிவால் நஷ்டம் வருமோ என்று அவன் கவலைப்பட வேண்டிய தேவை இருப்பதில்லை. ஆனால் அறுவடை சமயத்தில் விலை உயர்ந்து இருந்தால் அப்பொழுது அவன் பெறவிருக்கும் அதிக இலாபத்தை இழக்கிறான்.

இருப்பு விலையில் இடர் மேலாண்மை

முதல் நிறுவனத்தின் பங்கு விலை அந்த நிறுவனம் வெற்றிகரமாக பொருளை தயாரிக்க கையாளும் செய்முறையை பொருத்து அடுத்த மாதத்தில் உயரும் என்று பங்குதாரர் நம்புகிறார். பங்குதாரர் தான் எதிர்பார்க்கும் விலை உயர்வைக் கொண்டு இலாபம் சம்பாதிக்க முதல் நிறுவனத்தின் பங்கை வாங்க நினைக்கிறார். ஆனால் முதல் நிறுவனம் தொழிற்சாலையில் இருக்கும் மிக எளிதில் மாறக்கூடிய நிறுவனம் ஆகும். பங்குதாரர் அவர் நம்பிக்கையின் அடிப்படையில் முதல் நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கினால், அப்பொழுது அவர் மேற்கொள்வது துணிகர வாணிகம் ஆகும்.

தொழிற்சாலையில் ஈடுபாடுகாட்டாமல் முதல் நிறுவனத்தில் ஈடுபாடு காட்டுவதால் அவர் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள இடர் மேலாண்மை புரிகிறார். இதற்கு அவர், விலை குறைவை எதிர்பார்த்து தனது நிறுவனத்தின் போட்டியாளராக இருக்கும் இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளுக்கு சமமாக (இருப்பு எண்ணிக்கை × விலை) விலையில் இருக்கக்கூடிய தனது பங்குகளை விற்க முனைகிறார். இந்த முறையில் வாணிகம் மேற்கொள்வதால் அவர் நேரடியாக குறைந்த ஆபத்தையே சந்திக்க நேரிடுகிறது. இது முதல் நிறுவனத்தின் அழைப்பு கடன் வீதத்தைச் சார்ந்தே அமைகிறது. ஆனால் இங்கு ஆபத்து குறைந்து இருக்கிறதே தவிர முற்றிலுமாக தவிர்க்கப்படவில்லை.

பங்குதாரரின் முதல் நாள் இலாக்கா:

  • முதல் நிறுவனத்தின் நீண்ட 1000 பங்குகள், ஒன்றின் விலை $1
  • இரண்டாம் நிறுவனத்தின் குறுகிய 500 பங்குகள் , ஒன்றின் விலை $2

(தனது பங்கின் விலையை குறைத்து விற்பனை செய்துள்ளார் பங்குதாரர் என்று இந்த எடுத்துக்காட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்)

இரண்டாம் நாள் அவர் பங்குகள் வாங்கி இருக்கும் தொழிற்சாலைக்கு சாதகமாக செய்திகள் வெளியாகின்றன. அதன் விளைவாக அந்த தொழிற்சாலை தயாரிக்கும் பொருட்களின் இருப்பின் விலை உயர நேரிடுகிறது. முதல் நிறுவனம் பலமான நிறுவனமாக இருப்பதால் அது 10% அதிகரிக்கிறது. இரண்டாம் நிறுவனம் 5% மட்டுமே உயர்கிறது:

  • முதல் நிறுவனத்தின் நீண்ட 1000 பங்குகள் , ஒன்றின் விலை $1.10: $100 இலாபம்
  • இரண்டாம் நிறுவனத்தின் குறுகிய 500 பங்குகள் , ஒன்றின் விலை $2.10 each: $50 இழப்பு

(சுருக்கமாக சொல்லப்போனால், முதலீட்டாளர் விலை குறைவினால் இங்கு நஷ்டப்படுகிறார்)

இரண்டாம் நாள் பங்குதாரர் தான் எடுத்த இடர் மேலாண்மையை நினைத்து வருந்தலாம். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு கிடைக்க இருந்த இலாபம் குறைந்தது. ஆனால், மூன்றாம் நாள் அவர் பங்கு வாங்கி இருக்கும் தொழிற்சாலையை பற்றி பாதகமான செய்திகள் வெளியாகி, அதன் இருப்பு விலை குறைய நேரிடும் பொழுது, அவர் முதலீடு செய்திருப்பதில் இருந்து 50% ஒரு சில மணிநேரத்திலேயே மறைகிறது. முதல் நிறுவனம் இரண்டாம் நிறுவனத்தை விட மதிப்பு கூடியது என்பதால் அது இரண்டாம் நிறுவனத்தை விட குறைவாக தான் பாதிக்கப்படுகிறது:

நீண்ட நிலை மதிப்பு (முதல் நிறுவனம்):

  • நாள் 1: $1000
  • நாள் 2: $1100
  • நாள் 3: $550 => ($1000 – $550) = $450 இழப்பு

குறுகிய நிலை மதிப்பு (இரண்டாம் நிறுவனம்):

  • நாள் 1: -$1000
  • நாள் 2: -$1050
  • நாள் 3: -$525 => ($1000 – $525) = $475 இலாபம்

இடர் மேலாண்மை இல்லாமல் இருந்திருந்தால் பங்குதாரர் $450 இழக்க நேரிட்டு இருக்கும் (பங்குதாரர் முதல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளை விலை குறைவை எதிர்பார்த்து $1000 க்கு விற்கவில்லை என்றால்,அவர் $900 இழந்திருக்க நேரிட்டு இருக்கும்) ஆனால் இந்த இடர் மேலாண்மை - விலை குறைவை எதிர்பார்த்து இரண்டாம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது - $475 இலாபத்தை கொடுத்துள்ளது. பெரும் நஷ்டம் இருக்க வேண்டிய இடத்தில் நிகர இலாபமாக $25 கிட்டுகிறது.

எரிபொருள் பயன்பாட்டில் இடர் மேலாண்மை

விமான எரிபொருளின் விலை உயர்வில் இருந்து தங்களை காத்துக்கொள்ள விமான சேவை நிறுவனங்கள், வருங்கால ஒப்பந்தங்கள் மூலம் அல்லது பிற வழிகளைக்கொண்டு இடர் மேலாண்மை செய்கின்றன. அவர்கள் வணிகத்தைத் தொடர தொடர்ச்சியாக எரிபொருளை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்த ஒன்றாகும். இப்பொழுது இருக்கும் நிலையில் எரிபொருள் விலை பயங்கரமாக மாறிக்கொண்டு இருப்பதில் கரை கடந்து உள்ளது. நிலத்தடி எண்ணெய் வருங்கால ஒப்பந்தங்கள் மூலம் தங்களது எரிபொருள் தேவைகளில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்துகொள்ளலாம் என்று நம்புகின்றன. 2003 ஈராக் போர் மற்றும் கத்ரீனா சூறாவளியை தொடர்ந்து அமெரிக்காவில் எரிபொருள் விலை மளமளவென எகிறியது. அப்பொழுது இடர் மேலாண்மை மூலம் தனது போட்டியாளரை விட சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் பணத்தை பெருமளவில் சேமித்து இருந்தது.

இடர் மேலாண்மை வகைகள்

தொழிற்சாலையில் கூறப்படும் உகந்த இருப்பு எடுத்துக்காட்டு இது. "ஜோடி வாணிகம்" என்று அழைக்கப்படும் இது தொடர்புள்ள இரு கடனீட்டு ஆவணங்களை விற்கும் முறையாகும். பங்குதாரர்கள் புதிய கணித முறைகள் மற்றும் கருவிகளைக் கொண்டு மாதிரி'யை கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் இடர் மேலாண்மையின் வகைகளும் அதிகரித்துள்ளன.

இடர் மேலாண்மை திறன் எடுத்துக்காட்டுகள்

இடர் மேலாண்மை திறன்கள் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி மூலத்தில் இருந்து வருவிக்க பெற்றவை, (கால் (call) மற்றும் புட் (put)ஆப்ஷன்ஸ்

  • இடர் திருப்பம்: கால் ஆப்ஷனை வாங்குவதும் புட் ஆப்ஷனை விற்பதும் ஒரே சமயத்தில் புரிவது.
  • டெல்டா ந்யூட்ரல் சந்தையில் நடுநிலையாகும். சந்தையில் ஒரு இலாக்காவில் பணம் பெருக்கெடுத்து இருப்பதற்கு இந்த மறு இடர் மேலாண்மை உதவுகிறது. இது மார்க்கெட் ந்யூட்ரல் மேலாண்மை திறனாகும்(நடுநிலையான சந்தை).

இயற்கை இடர் மேலாண்மை

மாரீட் புட் என்று அழைக்கப்படும் நிதி கருவியைப்போல் நவீன கருவிகளை இடர் மேலாண்மை பயன்படுத்துவதில்லை. பணப் போக்குவரத்துக்கு (வரவு மற்றும் செலவு) ஏற்றவாறு தேவையில்லாத இடர்களை குறைக்க உதவும் முதலீடு இயற்கை இடர்பாட்டு மேலாண்மையாகும். எடுத்துக்காட்டு: யுனைடெட் ஸ்டேட்ஸ் க்கு சரக்குகளை அனுப்பும் ஏற்றுமதியாளர் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம் அடைவதன் மூலம் இடர்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் அவர் அமெரிக்க சந்தையில் விற்பனை மூலம் பெரும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியை துவங்குகிறார். ஒரு நிறுவனம் மற்றொரு நாட்டில் துணை நிறுவனத்தை துவங்கி அதனை நடத்த அந்த ஊர் பணத்தை கடன் வாங்குகிறது. அந்த ஊரின் வட்டிவிகிதம் தனது ஊரின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்திலும் அந்த நிறுவனம் கடனை வாங்குகிறது. அந்நிய நாட்டில் தனக்கு வரும் வருமானத்தை பொருத்து அந்த நாட்டில், தனது பணத்தைச் செலவிட தாய் நிறுவனம் திட்டமிடுகிறது. இது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

தனது வருமானத்தை அமெரிக்க டாலரில் பெற எதிர்பார்க்கும் எண்ணெய் வியாபாரி செலவுகளை அந்நிய செலாவணி மூலம் எதிர்கொள்ள நேரிடுகிறது. தனது ஊழியர்களுக்கு இது யுஎஸ் டாலரில் சம்பளம் அளிப்பது என்பது இயற்கையான இடர் மேலாண்மை ஆகும்.

இடர் மேலாண்மையின் மிகப் பழமையான வழி காப்பீட்டு திட்டம் வாங்குதல் ஆகும். இது விபத்துகள் மூலம் நிகழும் அழிவினால் ஏற்படும் நிதி இழப்பை தவிர்க்கும் பாதுகாப்பு அமைப்பாகும்.

மேலாளக் கூடிய ஆபத்துகளின் வகைகள்

கீழ் கூறப்பட்டுள்ள இடர்களின் வகைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் கணக்கில் காட்டும் செலாவணி, இறக்குமதியாளர்களின் செலாவணியின் மதிப்புக்கு எதிரே விழுகிறது. இது நிலையில்லாத இடர் ஆகும்.

  • வட்டி விகித இடர் – வட்டிவிகிதம் இடப்பட்டிருக்கும் சொத்தின் (கடன் அல்லது பாண்ட்), கடுமையாக அதிகரித்த வட்டி விகிதத்தைச் சந்திக்கிறது. இந்த இடரை நிலையான வருமான ஈட்டிக்கருவிகள் மூலம் அல்லது வட்டி விகிட்டிஹா மாற்றம் மூலம் ஈடுகட்டலாம்.
  • ஈகுவிடி – ஈகுவிட்டி கையிருப்புகளாக இருக்கும் சொத்துகள் சமயத்தில் இடராகவும் பரிசாகவும் மாறுகிறது. இந்த நேரங்களில் ஈகுவிட்டியின் மதிப்பு வீழ்கிறது.
  • கடனீட்டு ஆவணங்கள் தருதல் - இடர் மேலாண்மை இலாக்காவில் பாதுகாப்பான இருப்பு கடன் வசதி (இடர்மேலாண்மை கடன் பார்க்க) ஒரு இலாக்காவில் தனி நபரின் இடர்பாட்டு குறைப்பாகும். இது கடனுக்கு கடனாளியைத் தவிர ஒப்பந்தத்தில் கையழுத்திட்டவரிடம் இருந்தும் பணத்தை பெரும் வசதியைக் கொண்டுள்ளது(recourse loan).

ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் மற்றும் பார்வர்ட் காண்ட்ராக்ட் சந்தைகள் மட்டமான நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் இடர்களை சமாளிக்க உதவுகின்றன. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில், முதலில் பொருட்கள் சந்தையில் தோன்றியது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த முறை உலகம் முழுவதில் இருக்கும் நிதி சந்தையிலும் இடர்களை சமாளிக்க பயன்படுத்தப்படுகின்றது.

கடன் இடரை சமாளிப்பது

திரும்ப தரப்படவேண்டிய பணம் கடனாளியால் தர மறுக்கப்படும் நிலையில் அதனை கடன் இடர் என்று அழைப்பர். இந்த கடன் இடர் எல்லா வங்கிகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய ஒரு இடராகும். ஆனால் இதனை சாதாரண நிலையில் வணிகர்கள் சந்திப்பதில்லை. ஆகையால் வங்கிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையே சந்தைகள் தோன்றின. இதில் கழிவு விகிதத்தில் ஏராளமான விற்பனைகள் நடந்தன. எடுத்துகாட்டு: பறிமுதல், பில் ஆப் லேடிங், காரணங்களை கொள்ளுதல் அல்லது கழிவு செய்த உண்டியல்.

செலாவணி இடரை சமாளிப்பது

செலாவணி இடர் சமாளிப்பு (அந்நிய செலாவணி இடர் சமாளிப்பு) நிதி முதலீட்டாளர்களால் அந்நிய நாட்டில் முதலீடு செய்யும் பொழுது ஏற்படும் இடர்களை சமாளிக்க உதவுகிறது. உலக பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற மனிதர்களும் இதில் ஒன்று அல்லது பல வழிகளில் தொடர்பு வைத்திருக்கின்றனர்.

இது ஒரு இடர்காப்பு முதலீடாக இருக்கலாம். அதாவது பிரேசிலில் உள்ள நிறுவனத்தில் பிரேசில் செலாவணி கொண்டு முதலீடு செய்யாமல் வேறு செலாவணி கொண்டு முதலீடு செய்யலாம். இந்த இடர் காப்பு நிதி பிரேசிலின் செலாவணி இடரை கடன் இடரில் இருந்து பிரிக்கிறது. இதன் விளைவாக பிரேசிலில் இருக்கும் முதலீடு அமெரிக்க டாலர் முதலீடாக இருக்கலாம். இந்த செய்முறை வழியே, பிரேசில் செலாவணியை கையாளும் வேறு எவருக்காவது முதலீட்டாளர் செலாவணி இடரை மாற்றி கொடுக்கலாம். அப்பொழுது இந்த இடர் காப்பு நிதியில் இருந்து முதலீட்டாளர் பிரேசில் செலாவணிக்கு வெளிப்படும் நபருக்கு இழப்பு தர நேரிடுகிறது. இது பல தரப்பு நிகழ்ச்சிகளில் இருந்து காத்துக்கொள்ள நாம் பெறுகின்ற காப்பீட்டு திட்டத்தைப் போல் உள்ளது.

பொருளாதார நிகழ்வுகள் குழப்பம் இல்லாமல் நடைபெற இடர் மேலாண்மை வழி வகுக்கிறது. (எ.கா. தான் கொண்டுள்ள பணத்தால் வாங்க முடியாத ஒரு விலை உயர்ந்த வீட்டை ஒருவன் கடன் பெற்று வாங்குகிறான்). பொருளாதாரம் சீர் பெற்று வளர்வதற்கு இந்த முதலீட்டின் அதிகரிப்பே காரணம் என்று நம்பப்படுகிறது.

சரி ஒப்புகள் மற்றும் எதிர்கால சரி ஒப்புகளில் ஏற்படும் இடர்களை சமாளித்தல்

எதிர்காலத்தில் எதிராளியின் இடத்தை படித்துக்கொள்வதன் மூலம் ஒரு இலாகாவில் இருக்கும் சரி ஒப்புகளில் ஏற்படும் இடர்களை சமாளிக்கலாம். சந்தைகளை சந்திக்கும் இடர்களில் இருந்து உங்கள் இருப்புகளை காத்துக்கொள்ள, சரி ஒப்புகள் வாங்கும் பொழுதே எதிர்கால சரி ஒப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். அல்லது சிறிய இருப்பு இருக்கும் நிலையில் நெடும் எதிர்கால சரி ஒப்புகளை பெற்று கொள்ளல் நல்லது.

இடர்களை சமாளிக்க பல வழிகள் இருந்தாலும் சந்தை சமநிலை வழிமுறை முக்கியமான ஒன்றாகும். இந்த வழிமுறையில், இருப்பு வணிகத்தில் இருக்கும் டாலர்களுக்கு சமமாக எதிர்கால சரி ஒப்புகளில் இருந்து எடுக்கப்படுகிறது. 10000 GBP மதிப்பு உடைய வோடாபோனை வாங்கி, 10000 மதிப்பு உடைய FTSE எதிர்கால சரி ஒப்புகளை குறுக்க வேண்டும்.

பீட்டா சமநிலையை கொண்டும் இடரை சமாளிக்கலாம். பீட்டா என்பது இருப்புக்கும் ஒரு குறியீட்டு எண்ணுக்கும் இடையே உள்ள வரலாற்று தொடர்பாகும். வோடபோனின் பீட்டா 2 ஆக இருந்தால், 20000 GBP மதிப்பில் இருக்கும் குறுகிய நிலை FTSE எதிர்கால சரி ஒப்புகள் கொண்டு , 10000 GBP மதிப்பில் இருக்கின்ற நீண்ட நிலை வோடபோனை நீங்கள் சமாளிக்கலாம்.(இது, வோடபோன் வாணிகம் கொண்டிருக்கும் குறிப்பு எண்ணாகும்).

எதிர்கால சரி ஒப்பு இடர் சமாளிப்பு

நீங்கள் முதன்மையாக கொள்ளும் வாணிகம் எதிர்கால சரி ஒப்புகளில் இருந்தால், பின்னர் நீங்கள் இடரை சமாளிக்க உங்கள் எதிர்கால சரி ஒப்புகளுக்கு எதிராக செயற்கை எதிர்கால சரி ஒப்புகளை இறக்க வேண்டியது வரும். இந்த செயற்கை எதிர்கால சரி ஒப்பில் ஒரு கால் மற்றும் ஒரு புட் இருக்கின்றன. நெடும் செயற்கை எதிர்கால சரி ஒப்பு என்றால் நெடும் கால் மற்றும் குறுகிய புட் என்று பொருள், இவை இரண்டுமே ஒரே விலையில் மதிப்பை இழக்கின்றன. ஆதலால் தங்கள் வணிகத்தில் தாங்கள் நெடும் எதிர்கால சரி ஒப்புகளை கொண்டிருந்தால், நீங்கள் செயற்கை எதிர்கால சரி ஒப்புகளை குறுக்குவதன் மூலம் இடரை சமாளிக்கலாம்.

மாற்றத்துக்கான ஒப்பந்தம்

காண்ட்ராக்ட் பார் டிபரன்ஸ் (CFD) என்பது இருவழி இடர் மேலாண்மை முறையாகும். இதனை மாற்ற ஒப்பந்தம் என்றும் கூறுவார். இது நிலையாக இல்லாத ஒரு பொருளின் விலையை விற்பனையாளர் அல்லது வாங்குபவர் மாற அனுமதிக்கிறது. எ.கா. மின்சார உற்பத்தியாளர் மற்றும் மின்சார விற்பனையாளர் இருவரும் மின்சார சந்தையில் வணிகம் செய்கின்றனர். உற்பத்தியாளரும் விற்பனையாளரும், ஒரு MWh க்கு $50௦ என்ற ஒருமித்த விலையை அடையும் பொழுது, வணிக காலத்தில் 1 MWh க்கு, கூட்டு விலை $70 ஆக இருக்கிறது. இதற்கு பிறகு உற்பத்தியாளர் கூட்டில் இருந்து $70 பெற்றுக்கொள்கிறார். ஆனால் அவர் $20 விற்பனையாளருக்கு திரும்பி தர வேண்டி இருக்கிறது.(இது கூட்டு விலைக்கும் ஒருமித்த விலைக்கும் உள்ள வித்தியாசமாகும்). கூட்டு விலை குறைவாக இருக்கும் பொழுது கூட்டு விலையில் இருக்கும் வித்தியாசத்தை விற்பனையாளர் உற்பத்தியாளருக்கு தருகிறார்.

இதன் விளைவு, நிலையில்லாமல் இருக்கும் கூட்டு சமநிலையை அடைகிறது. ஆகையால் இருவருமே ஒரு MWh க்கு $50 ஐ பெற்று தந்து கொள்கின்றனர். வித்தியாசத்தை தரும் நபர் "பணம் இல்லாதவர்" ஆகிறார். இடர் மேலாண்மை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் கூட்டு விலையின் மூலம் இலாபத்தை ஈட்டி இருந்திருப்பர்.

தொடர்புடைய கருத்துகள்

போர்வார்ட்ஸ்
வழங்கப்படவிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு செலாவணிக்கான ஒப்பந்தம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பான ஒரு பரிமாற்ற விகிதத்துடன் முடிவு செய்யப்படுகிறது.
போர்வார்ட் ரேட் அக்ரீமென்ட்
ஒப்பந்தத்திற்கு முன்னரே பெற்ற ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை கொண்டுள்ள ஒரு தொகையை ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டிருக்கும் நாளில் தர முடிவு செய்யப்படுகிறது. இதனை FRA என்றும் அழைப்பர்.
செலாவணி விருப்பம்
உரிமையாளர் (கால் ஆப்ஷனை) எடுக்க அல்லது (புட் ஆப்ஷனை)தர அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது கட்டாயம் அல்ல. குறிப்பிட்ட தொகை, வாங்கும் நாளில் பெறப்பட்டுள்ள பரிமாற்ற விகிதத்தை சார்ந்து வருகிறது.
நான்-டெலிவேரபில் போர்வேர்ட்ஸ் (NDF)
போர்வர்ட் ரேட் அக்ரீமென்ட் போல் இதுவும் ஒரு இடர் மாற்ற நிதி பொருள் ஆகும். இது செலாவணிகள் மீது நிதி கொள்கை தடை விதிக்கப்பட்டிருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. இது எளிமையாக இருக்கும் போக்குவரத்தை நிறுத்தி முதலீட்டு மாற்றத்திலும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. NDF கள் வழங்கப்படுவதில்லை. இவை குறிப்பான செலாவணியுடன் இணைக்கப்படுகின்றன. எ.கா. USD அல்லது EUR. இங்கு இருதரப்பினரும் இல்லாமல் மற்றும் இழப்பை NDF கருவியின் கணக்கில் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த கட்டுபாட்டுக்குள்ளான செலாவணியை வாங்கும் நபருக்கு திடமான செலாவணி தேவைப்பட்டால் அவர் குறிப்பிட்ட தொகையை தொர்டர்புடையை அரசாங்கத்தை நாடுவதன் மூலம் பெற்று அதனை USD அல்லது EUR வில் மாற்றிக்கொள்ளலாம். இங்கு காப்பீடும் அதே போல் தான் உள்ளது. ஆனால் இங்கு பாதுகாக்கப்படும் செலாவணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதல் கட்டுப்பாட்டை பார்க்க.
வட்டி விகித சமன் மற்றும் மூடிய செலாவணி வட்டிவிகித நிலை
இரண்டு வித்தியாசமான செலாவணியில் ஒரே மாதிரியான முதலீடுகள் திரும்ப பெறும் வருவாயின் மதிப்பு ஒன்றாகவே தான் இருக்கும். ஒரே வட்டிவிகிதத்துடன் அந்த இரு முதலீடுகளும் இல்லாத நிலையில், வட்டிவிகிதத்தில் மாற்றங்கள் செய்வதன் மூலம் வித்தியாசத்தை சரி செய்து கொள்ளலாம். பரிமாற்றத்தின் வருங்கால விகிதத்தை கணக்கிட IRP உதவுகிறது. இது முன்னரே அறிந்து கூறிவிடும் விகிதம் கிடையாது. இது செலாவணி விகித சமநிலை சம்மந்தம் இல்லாமல் செய்யும் கணக்காகும். செலாவணியை மற்றொன்றாக மாற்றும் நிலையில் சுலபமாக இலாபத்தை பெற இதன் பரிமாற்ற விகிதம் கடுமையாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதனை முதலீடு செய்து பின்னர் அதனை மறுபடியும் தனது நாட்டு செலாவணிக்கே மாற்றிகொள்வது, நிறைய இலாபத்தை ஈட்ட உதவுகிறது. இது தனது நாட்டில் தனது செலாவணியில் பெரும் கிலாபத்தை விட அதிகமாக உள்ளது.
இடர் மேலாண்மை நிதி
இடர்மேலாண்மை திறன்கள் அல்லது இடர் மேலாண்மை ஒப்பந்த ஆவணத்தில் ஈடுபடுத்தப்படும் நிதி.
  • பண தொடர்புடைமையைக் காட்டுதல்
  • இடர் மேலாண்மை
  • அடிப்படை மாற்றம்
  • பண மாற்றம்
  • FX மாற்றம்
  • வட்டிவிகித மாற்றம்

மேலும் பார்க்க

  • செலாவணி விகித சமநிலை
  • சொத்து-கடன் பொருத்தம் இல்லாமை
  • பண போக்குவரத்து இடர் மேலாண்மை
  • பாதுகாப்பு (நிதி)
  • நிதி தலைப்புகள் பட்டியல்
  • விருப்பம் (நிதி )
  • பரப்பு
  • அந்நிய செலாவணி இடர் மேலாண்மை
  • எரிபொருள் விலை இடர் மேலாண்மை
  • நிலையான உண்டியல்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்