இந்திய திரைப்பட ஆளுமை விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது

இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது
விருது வழங்குவதற்கான காரணம்"இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் தலைசிறந்த கெளரவம்"
இதை வழங்குவோர்இந்திய சர்வதேச திரைப்பட விழா
முதலில் வழங்கப்பட்டது2013; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
கடைசியாக வழங்கப்பட்டது2022
சமீபத்தில் விருது பெற்றவர்சிரஞ்சீவி
Highlights
முதல் விருது பெற்றவர்வஹீதா ரஹ்மான்

இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது என்பது இந்திய சர்வதேச திரைப்பட விழாவால் நிறுவப்பட்ட தேசிய கௌரவமாகும்.[1][2] " இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக விருது பெற்றவர் கௌரவிக்கப்படுகிறார். இந்த விருது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நாற்பத்து நான்காவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.[3]

ஆண்டின் இந்தியத் திரைப்பட ஆளுமை (2013 முதல் –தற்போது)

2013 ஆம் ஆண்டு முதல், இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு, "ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை" விருது நிறுவப்பட்டு கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. இந்தியத் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இந்தியத் திரைப்பட ஆளுமைக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு வெள்ளி மயில் பதக்கம், சான்றிதழ் மற்றும் 10,00,000 ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[4][5]

ஆண்டு படம் விருது பெற்றவர் வேலை
2013 (நாற்பத்திநான்காவது ) வஹீதா ரஹ்மான் நடிகை
2014 (நாற்பத்ததைந்தாவது ) ரஜினிகாந்த் நடிகர்
2015 (நாற்பத்தாறாவது ) இளையராஜா இசையமைப்பாளர்
2016 (நாற்பத்தேழாவது ) எஸ்பி பாலசுப்ரமணியம் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
2017 (நாற்பத்தியெட்டாவது ) அமிதாப் பச்சன் நடிகர்
2018 (நாற்பத்தியொன்பதாவது ) சலீம் கான் திரைக்கதை எழுத்தாளர்
2020 (ஐம்பத்தியொன்றாவது ) பிஸ்வஜித் சாட்டர்ஜி நடிகர்
2021 (ஐம்பத்திரண்டாவது ) ஹேமா மாலினி திரைப்பட ஆளுமை
2021 (ஐம்பத்திரண்டாவது ) பிரசூன் ஜோஷி பாடலாசிரியர்
2022 (ஐம்பத்துமூன்றாவது ) Chiranjeevi-20190801110016-8359.jpg சிரஞ்சீவி நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது பொன்விழா ஆண்டின் ஐகான் விருது

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு,இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்துக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பொன்விழா ஆண்டின் ஐகான் விருது வழங்கப்பட்டது [6]

ஆண்டு படம் விருது பெற்றவர் வேலை
2019 (ஐம்பதாவது) ரஜினிகாந்த் நடிகர்

மேற்கோள்கள்