இருபதுகோணி
ஒழுங்கான இருபதுகோணி | |
---|---|
ஓர் ஒழுங்கான இருபதுகோணி | |
வகை | ஒழுங்கான பல்கோணி |
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 20 |
சிலாஃப்லி குறியீடு | {20} t{10} |
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
சமச்சீர் குலம் | ஆரைச் சமச்சீர் (D20) |
உட்கோணம் (பாகை) | 162° |
இருமப் பல்கோணம் | சுயம் |
பண்புகள் | குவிவுப் பல்கோணி, வட்டப் பல்கோணி, சம பக்கப் பல்கோணி, சம கோணப் பல்கோணி |
வடிவியலில், இருபதுகோணி (Icosagon) என்பது இருபது பக்கங்களை உடைய பல்கோணி ஆகும்.[1] எந்தவோர் இருபதுகோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 3240° ஆக இருக்கும்.[2]
ஒழுங்கான இருபதுகோணியொன்றின் அகக்கோணமொன்று 162° ஆகவும் புறக்கோணமொன்று 18° ஆகவும் இருக்கும்.[3]
பயன்பாடுகள்
த பிரைசு இசு இரைட்டு என்ற ஐக்கிய அமெரிக்க ஆட்ட நிகழ்ச்சியில் இருபதுகோணி வடிவில் அமைந்த சில்லுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4]
சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற இருபதுகோணியின் வடிவில் அமைந்துள்ளது.[5]
அமைப்பு
கவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்தி ஒழுங்கான இருபதுகோணியொன்றை வரைய முடியும்.
மேற்கோள்கள்
- ↑ இருபதுகோணி (ஆங்கில மொழியில்)
- ↑ இருபதுகோணிப் படம் (ஆங்கில மொழியில்)
- ↑ இருபதுகோணி (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] இருபதுகோணி (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சுவசுத்திக்கா (ஆங்கில மொழியில்)