இரைனாடு கென்செல்

இரைனாடு கென்செல்
Reinhard Genzel
பிறப்பு24 மார்ச்சு 1952 (1952-03-24) (அகவை 72)
பாடு ஆம்பூர்கு, மேற்கு செருமனி (இன்றைய செருமனி)
துறைவானியற்பியல்
பணியிடங்கள்புவிக்கப்பாலான இயற்பியலுக்கான மாக்சு பிளாங்க் கல்விக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கல்வி
  • பிரைபர்கு பல்கலைக்கழகம் (BSc)
  • பான் பல்கலைக்கழகம் (MSc, DPhil)
அறியப்படுவதுஅகச்சிவப்பு வானியல்
அலை வானியல்
விருதுகள்

இரைனாடு கென்செல் (Reinhard Genzel, பிறப்பு: 24 மார்ச்சு 1952) ஓர் இடாய்ச்சுலாந்திய விண்ணியற்பியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஆந்திரியா கியேசு அவர்களுடனும் உரோசர் பென்ரோசு அவர்களுடனும் சேர்ந்து வென்றார்[1].

வாழ்க்கை

இரைனாடு கென்செல், பிரைபூர்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார், பான் பல்கலைக்கழகத்தில் 1978 இல் முனைவர் பட்டம் பெற்றார் [2]. முனைவர் பட்டம் பெற்ற அதே ஆண்டில் வானலை வானியல் துறைக்கான மாக்கு பிளாங்கு கழகத்தில் வானலை வானியல் ஆய்வுரையைப் படைத்தார்.[2] பின்னர் அமெரிக்காவில் மாசாச்சூசெட்சு மாநிலத்தில் கேம்பிரிட்சு நகரில் உள்ள விண்ணியற்பியலுக்கான ஆஇர்வேடு-சுமித்துசோனிய நடுவத்தில் பணியாற்றினார்.

பணி

இரைனாடு கென்செல் அகச்சிவப்பலை வானியல், மில்லிமீட்டருக்குக் கீழான அலை வானியல் ஆகிய துறைகளில் ஆய்வு செய்கின்றார். நிலவுலகில் இருந்தே மதிப்பிட்டறியக்கூடிய வானியல் கருவிகளும் விண்ணில் இருந்து மதிப்பிடக்கூடிய வானியல் கருவிகள் செய்வதிலும் உழைக்கின்றார். இவரும் இவருடைய ஆய்வுக்குழுவினரும் பால்வழி விண்மீன் பேரடையின் நடுவே ஒரு மீப்பெரும் நிறையுடைய கருந்துளை இருப்பதை கண்டுபிடித்தார். இது தனுசு எ* என்னும் விண்மீனருகே இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.[3] கென்செல் விண்மீன் பேரடை உருவாகுவது பற்றிய கருத்துகளிலும் ஆர்வம் உடையவர். [சான்று தேவை]

சூலை 2018 இல் இரைனாடு கென்செல்லும் அவர் குழுவினரும், தனுசு எ* ஐச் சுற்றும் விண்மீன் S2 ஆனது நொடிக்கு 7,650 கி.மீ விரைவில், அதாவது 2.55% ஒளியின் வேகத்தில், மே 2018 இல் தனுசு எ* இலிருந்து ஏறத்தாழ 120 வானியல் அலகு ≈ 1400 சுவாட்சைலுடு ஆரங்கள் உள்ள நீள்வட்ட முனைக்கு இட்டுச் சென்றது. இது சார்பியல் திசைவேகங்களில் பொதுவான சார்பியலால் கணிக்கப்பட்ட சிவப்பு மாற்றத்தை மதிப்பிட உதவியது, கோட்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது[4][5]

பரிசுகளும் பெருமைகளும்

இரைனாடு கென்செல், சூலை 2018 இல் எடுத்த படம்.
  • மில்லர் ஆய்வுச் சிறப்பாளர் (Miller Research Fellowship), 1980–1982[6]
  • ஆட்டோ ஆன் பதக்கம் (Otto Hahn Medal), Max-Planck-Gesellschaft, 1980[6]
  • குடியரசுத்தலைவர் இளம் ஆய்வாளர் விருது (Presidential Young Investigator Award), அமெரிக்கத் தேசிய அறிவியல் நிலைக்களம் (National Science Foundation), 1984[6]
  • நியூட்டன் இலேசி பியேர்சுப் பரிசு (Newton Lacy Pierce Prize), அமெரிக்க வானியல் குமுகம் (American Astronomical Society), 1986[6]
  • காட்பீல்து வில்லெம் இலைபினித்சு பரிசு (Gottfried Wilhelm Leibniz Prize), (Deutsche Forschungsgemeinschaft), 1990[6]
  • தி வோக்குலே பதக்கம் (De Vaucouleurs Medal), தெக்குசாசு பல்கலைக்கழகம், 2000[6]
  • இழூல் இழான்சென் பரிசு (Prix Jules Janssen), பிரான்சிய வானியல் குமுகம் (Société astronomique de France), 2000[6]
  • சுதேரன் கெருலாக்குப் பதக்கம் (Stern Gerlach Medal), செய்கள இயற்பியலுக்கான பரிசு, இடாய்ச்சு இயற்பியல் கழக்ம் (Deutsche Physikalische Gesellschaft), 2003[6]
  • பல்சான் பரிசு (Balzan Prize), அகச்சிவப்பலை வானியல், 2003[6]
  • ஆல்பேர்த்து ஐன்சுட்டீன் பதக்கம் (Albert Einstein Medal), 2007[7]
  • சா பரிசு (Shaw Prize), 2008[8]
  • "கலீலியோ 2000" பரிசு, (Galileo 2000" Prize), 2009[6]
  • காரல் சுவார்ட்சைல்து பதக்கம் (Karl Schwarzschild Medal), இடாய்ச்சு வானியல் கழகம் (Deutsche Astronomische Gesellschaft), 2011[9]
  • கிராபூர்து பரிசு (Crafoord Prize), சுவீடன் வேந்தியக் கல்விக்கழகம் (Royal Swedish Academy), 2012[10]
  • தைக்கோ பிராகே பரிசு (Tycho Brahe Prize), ஐரோப்பிய வானியல் குமுகம் (European Astronomical Society), 2012[11]
  • Pour le Mérite, 2013[12]
  • ஆர்வி பரிசு (Harvey Prize), தெக்குனியான் கல்விக்கழகம், இசுரேல், 2014[13]
  • எர்செல் பதக்கம் (Herschel Medal), இலண்டன் வேந்திய வானியல் குமுஇகம் (Royal Astronomical Society), 2014[14]
  • நோபல் பரிசு, இயற்பியல், 2020[1]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. 1.0 1.1 "Press release: The Nobel Prize in Physics 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  2. 2.0 2.1 Curriculum-vitae பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம், website of the Max-Planck-Institut für extraterrestrische Physik
  3. Eckart, A.; Genzel, R. (1996). "Observations of stellar proper motions near the Galactic Centre". Nature 383 (6599): 415. doi:10.1038/383415a0. Bibcode: 1996Natur.383..415E. 
  4. Abuter, R.; Amorim, A. (2018). "Detection of the gravitational redshift in the orbit of the star S2 near the Galactic centre massive black hole". Astronomy & Astrophysics 615: L15. doi:10.1051/0004-6361/201833718 இம் மூலத்தில் இருந்து 2018-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180829144419/https://www.aanda.org/articles/aa/abs/2018/07/aa33718-18/aa33718-18.html. பார்த்த நாள்: 2020-10-06. 
  5. Star spotted speeding near black hole at centre of Milky Way -- Chile’s Very Large Telescope tracks S2 star as it reaches mind-boggling speeds by supermassive black hole, தி கார்டியன், 26 July 2017
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 "Profesor Reinhard Genzel". Spanish Royal Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  7. The Awarding of the Einstein Medal: Albert Einstein Medal Laureates at ஆல்பேர்த்து ஐன்சுட்டீன் பதக்கம் website
  8. "The Shaw Prize". The Shaw Prize. 28 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  9. "Reinhard Genzel receives Karl Schwarzschild Medal 2011". 13 July 2011. Archived from the original on 1 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016. {cite web}: Check date values in: |archive-date= (help)
  10. "Crafoord Prize for Reinhard Genzel". Max-Planck-Gesellschaft. 22 July 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  11. "Tycho Brahe-Preis für Reinhard Genzel". Max-Planck-Institut für extraterrestrische Physik (in ஜெர்மன்). 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
  12. "Pour le Mérite: Reinhard Genzel" (PDF). www.orden-pourlemerite.de. 2013. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  13. Harvey Prize 2014 பரணிடப்பட்டது 2 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம்
  14. "Awards, Medals and Prizes – Herschel Medal". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.

வெளி இணைப்புகள்