இறுதி முற்றுகை
இறுதி முற்றுகை (Checkmate) என்பது சதுரங்கத்தில் (சதுரங்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும்) ஒரு போட்டியாளரின் அரசன் கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும்.[1] எளிமையாகக் கூறுவதானால், அரசன் நேரடித் தாக்குதலிலமைந்து, தான் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட முடியும்.[2] சதுரங்கத்தில் இறுதி முற்றுகைக்காளாக்குவதே ஒரு சதுரங்கப் போட்டியாளரின் முக்கிய நோக்கம் ஆகும். இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட போட்டியாளர் போட்டியில் தோல்வியடைவார். பொதுவாக, சதுரங்கத்தில் அரசன் கைப்பற்றப்படுவதில்லை. அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டவுடனேயே போட்டி முடிவுறும்.[3] ஏனெனில், அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட பிறகு அப்போட்டியாளரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. சில போட்டியாளர்கள் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்து இறுதி முற்றுகைக்காளாக்கப்பட முன்னரே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதுமுண்டு.
அரசன் தாக்குதலின் கீழிருந்தும் அதனைத் தடுக்க முடியுமாயின், அது முற்றுகை என்றே (இறுதி முற்றுகை என்றல்ல.) அழைக்கப்படும்.[4] போட்டியாளரின் அரசன் முற்றுகைக்காளாகாதவிடத்தும் அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வைச் செய்ய முடியாதவிடத்து அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும்.[5] இதன்போது போட்டி சமநிலையில் முடிவடையும்.[6]
இயற்கணிதக் குறியீட்டு முறையில் இறுதி முற்றுகையானது எண் குறியீட்டின் (#) மூலம் காட்டப்படும் (எ-டு: 42.Qh6#).[7]
எடுத்துக்காட்டுகள்
சதுரங்கப் பலகையில் அனைத்துக் காய்களும் இருக்கும்போதே இரண்டு நகர்வுகளிற்கூட (முட்டாளின் இறுதி போன்று) இறுதி முற்றுகை இடம்பெறலாம்.
வரலாறு
தொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.
இரு பெருங்காய்கள்
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
இரு பெருங்காய்களும் (அரசியும் கோட்டையும்) தமது அரசனின் உதவியின்றியே பலகையின் விளிம்பில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.[8]
முதலாவது படத்தில், வெள்ளையானது கறுப்பு அரசனை இலகுவில் இறுதி முற்றுகைக்குள்ளாக்க முடியும்.
1.Qg5+ Kd4
2.Rf4+ Ke3
3.Qg3+ Ke2
4. Rf2+ Ke1
5. Qg1# (இரண்டாவது படம்)
இரண்டு அரசிகளையோ இரண்டு கோட்டைகளையோ கொண்டு இறுதி முற்றுகைக்குள்ளாக்குவதும் இதை ஒத்ததே.[9]
அடிப்படை இறுதி முற்றுகைகள்
அரசியும் அரசனும்
அரசனும் கோட்டையும்
ஆனாலும் இரண்டு சாத்தியமான நகர்வற்ற நிலைகள் குறித்துங்கவனஞ்செலுத்த வேண்டும்.
அரசனும் இரண்டு அமைச்சர்களும்
அரசனும் அமைச்சரும் குதிரையும்
அமைச்சர் கட்டுப்படுத்துகின்ற மூலையில் மட்டுமே அரசனையும் அமைச்சரையும் குதிரையையுங்கொண்டு இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.
இரண்டு குதிரைகளும் மூன்று குதிரைகளும்
இரண்டு குதிரைகள்
மூன்று குதிரைகள்
ஓரரசனும் மூன்று குதிரைகளும் தனித்த அரசனை இருபது நகர்வுகளுக்குள் இறுதி முற்றுகைக்காளாக்க முடியும்.[10] இவ்வாறான நிலைமைகள் பெரும்பாலும் சதுரங்கச் சிக்கல்களிலேயே காணப்படும். போட்டியில் குறை நிலை உயர்வுக்காக (சாத்தியமான நகர்வற்ற நிலையைத் தவிர்க்க) இன்னுமொரு குதிரையைப் பெற்றிருந்தாலே இவ்வாறான நிலைமை ஏற்படும்.
அரிதான இறுதி முற்றுகை நிலைகள்
சில அரிதான நிலைகளில், அரசனும் அமைச்சரும் எதிர் அரசனும் காலாளும், அரசனும் குதிரையும் எதிர் அரசனும் காலாளும் ஆகிய நிலைமைகளில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.
சிட்டம்மாவின் இறுதி
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
விலிப்பு சிட்டம்மாவின் பெயரால் சிட்டம்மாவின் இறுதிக்கான படம் அருகிலே காட்டப்பட்டுள்ளது. வெள்ளை நகர்வதாக இருந்தால் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.
1.Nb4+ Ka1
2.Kc1 a2
3.Nc2#
கறுப்பு நகர்வதாக இருந்தாலும் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.
1.... Ka1
2. Nc1 a2
3. Nb3#
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சிட்டம்மாவின் இறுதி சதுரங்க விளையாட்டுகளிலும் ஏற்பட்டுள்ளது. 2001இல் இடம்பெற்ற நொகுயெயிரசுக்கும் கொன்கோரவுக்கும் இடையிலான போட்டியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது,
81.Kc2 Ka1
82.Nc5 Ka2 (82.... a2 ஆக இருப்பின் 83.Nb3#)
83.Nd3 Ka1
84.Nc1
என்று நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[11] இங்கே கறுப்பு போட்டியிலிருந்து விலகுகின்றது. ஆனாலும் ஆட்டம் இவ்வாறு தொடரலாம்.
84.... a2
85.Nb3#
வழக்கத்திற்கு மாறான இறுதி முற்றுகை நிலைகள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ ["இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)!". Archived from the original on 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04. இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)!]
- ↑ இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)
- ↑ "இறுதி முற்றுகை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
- ↑ சதுரங்கம் விளையாடக் கற்கவும் (ஆங்கில மொழியில்)
- ↑ சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)
- ↑ "சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
- ↑ சதுரங்கக் குறியீடு (ஆங்கில மொழியில்)
- ↑ "இரண்டு பெருங்காய்கள் மூலம் இறுதி முற்றுகை (கோட்டையும் அரசியும்) (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-11-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
- ↑ 1. பெருங்காய்களால் இறுதி முற்றுகைக்காளாக்குதல் (ஆங்கில மொழியில்)
- ↑ ["3 குதிரைகள்-அரசன் எதிர் அரசன் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04. 3 குதிரைகள்-அரசன் எதிர் அரசன் (ஆங்கில மொழியில்)]
- ↑ இயேசு நொகுயெயிரசு எதிர் மைக்கேல் கொன்கோர (ஆங்கில மொழியில்)