இலட்சுமி காந்தா சாவ்லா

இலட்சுமி காந்தா சாவ்லா
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2012
முன்னையவர்தர்பாரி இலால்
பின்னவர்ஓம் பிர்காசு சோனி
தொகுதிஅமிர்சரசு
பதவியில்
1992–1997
பதவியில்
1997–2002
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி
தொழில்அரசியல்வாதி

இலட்சுமி காந்தா சாவ்லா (Laxmi Kanta Chawla) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். சாவ்லா முதுகலை பட்டாதாரி ஆவார். இவர் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] இவர் பஞ்சாப் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சாவ்லா, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் மாநில அமைச்சர் ஆவதற்கு முன்பு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்.[2] சாவ்லா முதன் முதலாக 1992ஆம் ஆண்டும் பின்னர் 1997ஆம் ஆண்டும் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களிலில் அமிர்சரசு மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்ல் சாவ்லா முன்பு சுகாதாரத் துறையையும் பின்னர் 2010இல் சமூக நலத் துறை அமைச்சராகவும் பொறுப்பிலிருந்தார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சாவ்லா, 2007[3] ஆண்டில் இதே, சட்டமன்றத் தொகுதியிலிருந்து மாநில சட்ட சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்