இலண்டன் பங்குச் சந்தை
இலண்டன் பங்குச் சந்தை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரம் இலண்டனில் அமைந்துள்ள பங்குச் சந்தையாகும். 1801ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பங்குச் சந்தை பிரித்தானிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்யும் வசதிகொண்டு உலகத்தின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் நிர்வாகத்தை இலண்டன் பங்குச் சந்தை குழுமம் மேற்கொள்கிறது. அதனுடைய சந்தைக் குறியீடு LSE.
கட்டமைப்பு
இலண்டன் பங்குச் சந்தையில் நான்கு முதன்மைப் பகுதிகள் உள்ளன:
பங்குச் சந்தை - உலகின் பல பகுதிகளிலிருந்தும் நிறுவனங்கள் தங்கள் முதலை எழுப்பிட உதவுகிறது. இங்கு நான்கு அடிப்படை சந்தைகள் உள்ளன; பிரதான சந்தை, மாற்று முதலீடு சந்தை (AIM), தொழில்முறை பத்திரச் சந்தை (PSM) மற்றும் சிறப்பு நிதி சந்தை(SFM).
பங்கு மாற்றுச் சேவைகள் - துடிப்பான பங்கு மாற்றுச் சந்தை:பிரித்தானிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள்,கடன் பத்திரங்கள், வரவுகள், சந்தை வணிக நிதியங்கள்(ETFs),சந்தை வணிக பொருட்கள்(ETCs) போன்ற நிதி ஆவணங்கள்,வைப்பு பற்றுக்கள்(depositary receipts) ஆகியவற்றில் வணிகம் நடைபெறுகிறது.
தகவல் சேவைகள் - இலண்டன் பங்குச் சந்தை நிகழ்நேர விலைகள், நெய்திகள் மற்றும் பிற நிதியச் செய்திகளை உலகெங்கும் உள்ள நிதியாளர் சமூகத்தின் பயன்பாட்டிற்காக வெளியிடுகிறது.
வழிப்பங்குகள் (Derivatives) - 2003இல் நிறுவப்பட்ட இலண்டன் பங்குச் சந்தையின் EDX பிரிவு பங்குகளை அடிப்படையாகக் கொண்ட வழிப்பங்குகளின் வணிகத்தில் இச்சந்தை முன்னணி வகிக்கிறது. இதன் மூலம் நேரடி பணம் புழங்கும் பங்குச்சந்தையையும் வழிப்பங்கு சந்தையையும் அண்மிக்க வைத்துள்ளது.
வேலைநேரம்
வழக்கமாக சனி,ஞாயிறு மற்றும் பங்குச்சந்தையால் முன்னரே அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களைத் தவிர்த்து காலை 08:00 முதல் மாலை 16:30 வரை வணிகம் நடைபெறுகிறது. [1]
- இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் 2,899.[2]
மேற்கோள்கள்
- ↑ Market Hours, London Stock Exchange via Wikinvest
- ↑ "List of Companies". londonstockexchange.com.
மேல் விவரங்களுக்கு
- Michie, R. C. (1999). The London Stock Exchange: A History. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198295081.
{cite book}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளியிணைப்புகள்
- London Stock Exchange website
- The LSE EuroSETS
- European Value Report பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம்
- "European Market Monitor: Down and Out Sans MTF Price Discovery in London." Despite a September 8 service outage, the LSE continues dominance setting prices for its listed securities. Global Investment Technology, Sept. 29, 2008