ஈமெடிசின்

ஈமெடிசின் என்பது ஒரு இணைய மருத்துவ அறிவுத் தளமாகும். இது 1996இல் இசுகொட் பிலான்ட்சு மற்றும் இரிச்சர்ட்டு இலவெளி எனும் இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. இவ்விணையத்தளம் கட்டுரைகளை இலகுவில் தேடத்தக்கவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் அதற்குரிய மருத்துவ துணைப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரைகளும் குறிப்பிட்ட பிரிவிற்குரிய சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் உரிய நேரத்தில் இற்றைப்படுத்தப்படுகின்றன.

வரலாறு

இவ்விணையத்தளம் வெப் எம்.டி (WebMD) நிறுவனத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டது[1].

இத்தளத்தைப் பயன்படுத்துதல் இலவசமாயினும் சில தேவைகளுக்குப் புகுபதிகை செய்தல் அவசியமாகும்.

மேற்கோள்கள்

  1. "Redherring.com". Archived from the original on 2010-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-11.

வெளி இணைப்பு