உப்பு சாலை
உப்பு சாலை (salt road) (உப்பு பாதை,உப்பு வழி,உப்பு வணிகப் பாதை எனவும் அழைக்கப்படுகிறது) என்பது அத்தியாவசியப் பொருளான உப்பு இல்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்று வர்த்தக பாதைகளைக் குறிக்கிறது.
வெண்கலக் காலத்திலிருந்து (கிமு 2ஆம் ஆயிரமாண்டு) கடல்சார் இலிகுரியாவை உயர் மலை மேய்ச்சல் நிலங்களுடன் இணைத்த லிகுரியன் வடிகால்களைப் போல நிலையான பரிமாற்ற வழிகள் தோன்றின. உப்பு நிறைந்த மாகாணங்களின் கட்டமைக்கப்பட்ட சாலைகள் மூலம் தரைவழி பாதைகளில் உப்பு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது .
சாலைகள்
இந்தச் சாலைகள்,இத்தாலியின் பண்டைய ரோமானிய சாலையான சாலாரியா வழியாக, இறுதியில் உரோமிலிருந்து (ஆரேலியன் வால்களில் உள்ள போர்ட்டா சலாரியாவிலிருந்து) ஏட்ரியாட்டிக் கடலில் காஸ்ட்ரம் துரூயெண்டினம் (போர்டோ டி அஸ்கோலி) வரை - 242 கிலோமீட்டர் (150 மைல்) தூரம் சென்றது. எஸ்எஸ் 4 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான இந்த பெயரில் ஒரு நவீன சாலை, உரோமில் இருந்து ஆர்விட்டோவில் உள்ள ஆஸ்திரியா நூவா வரை 51 கிலோமீட்டர் (32 மைல்) செல்கிறது.
பண்டைய ரோமானிய சாலையான வியா சாலாரியா, இறுதியில் ரோமில் இருந்து அட்ரியாடிக் கடற்கரை வரையில் காஸ்ட்ரம் திரூயெண்டினம் வரை ஓடியது - 242 கிலோமீட்டர்கள் (150 mi) . எஸ்எஸ் 4 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான இந்த பெயரில் ஒரு நவீன சாலை 51 கிலோமீட்டர்கள் (32 mi) ஓடுகிறது. உரோமில் இருந்து ஆர்விட்டோவில் உள்ள ஆஸ்டீரியா நுவா வரை செல்கிறது.
பழைய உப்பு பாதை, சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்), வடக்கு ஜெர்மனியில் ஒரு இடைக்காலப் பாதையாக இருந்தது. இது லுன்பெர்க்கை லூபெக் துறைமுகத்துடன் இணைக்கிறது. 10 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் குறிப்பிடப்பட்ட லுன்பேர்க், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உப்புகளால் நிறைந்திருந்தது. வர்த்தகர்கள் லாயன்பர்க் வழியாக லூபெக்கிற்கு உப்பு அனுப்பினர். இது பால்டிக் கடலின் அனைத்து கடற்கரைகளிலிலும் கொண்டு செல்லப்பட்டது. நீண்ட கால செழிப்புக்குப் பிறகு, அதன் முக்கியத்துவம் 1600 க்குப் பிறகு குறைந்தது. உப்பு சுரங்கங்கள் கடைசியாக 1980 இல் மூடப்பட்டது. இது ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இடைக்கால போஸ்னியாவில், நரேண்டா வழியாக போட்விசோகி மற்றும் துப்ரோவ்னிக் இடையே வர்த்தக பாதையாக பயன்படுத்தப்பட்டது. 600 குதிரைகள் சுமார் 1500 மோடியஸ் உப்பை போட்விசோகிக்கு வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]
எத்தியோப்பியாவில் உப்பு தொகுதிகள், அஃபோர் உப்புத் தொட்டிகளில் இருந்து எடுக்கப்பட்டன. குறிப்பாக அஃப்ரேரா ஏரியைச் சுற்றிலும், பின்னர் ஒட்டகம் மூலம் மேற்கே அட்ஸ்பி மற்றும் எத்தியோப்பிய மேட்டுநிலங்களில் உள்ள பிச்சோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வர்த்தகர்கள் அவற்றை எத்தியோப்பியாவின் மற்ற பகுதிகளுக்கு விநியோகித்தனர். தெற்கே காஃபா இராச்சியம் வரை.
சீன மக்கள் குடியரசு, திபெத்தை இணைத்து 1950 களில் எல்லைகளை மூடுவதற்கு முன்பு, நேபாளத்துக்கும் திபெத்துக்கும் இடையிலான உப்பு வர்த்தகம் இமயமலை வழியாக மேல் கர்னாலி மற்றும் கந்தகி நதிகளின் பள்ளத்தாக்குகள் வழியாக நடைபெற்றது. திபெத்திய பீடபூமியில் வறண்ட ஏரிகளில் இருந்து உப்புக்கு ஈடாக விலங்குகளின் மேல் வணிகர்கள் நேபாளத்தின் தெராய் மற்றும் கீழ் மலைகளிலிருந்து அரிசியைக் கொண்டு வந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தில் 'சால்ட் வே' என அழைக்கப்படும் ஒரு பழங்காலச் சாலை திராய்ட்விச் ஸ்பாவிலிருந்து, பான்பரியைக் கடந்து பிரின்சஸ் ரிஸ்பரோவுக்குச் செல்கிறது. [2] . உப்பு வழி செயல்பாட்டுக் குழுவால் இந்த வழி நிர்வகிக்கப்படுகிறது [3] .
குறிப்புகள்
- ↑ Renuntiando” (9. August 1428), State archive, Ragusa Republic, Series: Diversa Cancellariae, Number: XLV, Foil: 31 verso.
- ↑ "The hundred of Banbury | British History Online". www.british-history.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
- ↑ "Salt Way Activity Group | Preserving the Salt Way". www.saltwayactivitygroup.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
நூலியல்
- Braudel, Fernand (1982). The Wheels of Commerce. Civilisation and Capitalism 15th–18th Century. Vol. vol. II. New York: Harper & Row.
{cite book}
:|volume=
has extra text (help); Invalid|ref=harv
(help) - Braudel, Fernand (1984). The Perspective of the World. Civilisation and Capitalism. Vol. vol. III. New York: Harper & Row.
{cite book}
:|volume=
has extra text (help); Invalid|ref=harv
(help) - Pankhurst, Richard K. P. (1968). Economic History of Ethiopia. Addis Ababa: Haile Selassie I University.
{cite book}
: Invalid|ref=harv
(help)