உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசம்

நட்சத்திரங்களின் வெப்பத்தையும் ஒளிச் செறிவையும் கொண்டு வாழ்தகமைப் பிரதேசத்தை நிர்ணயித்தல்

வாழ்தகமைப் பிரதேசம் என்பது, ஒரு நட்சத்திரத்தைச் சூழ உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும் விண்வெளிப் பகுதியாகும். சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Su-Shu Huang, American Scientist 47, 3, pp. 397–402 (1959)
  2. Dole, Stephen H. (1964). Habitable Planets for Man. Blaisdell Publishing Company. p. 103.
  3. J. F. Kasting, D. P. Whitmire, R. T. Reynolds, Icarus 101, 108 (1993).