உயிருடன் ஏற்றுமதி

விலங்குகளை உயிருடன் ஏற்றுமதிச் செய்ய வேண்டிப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கப்பல்

உயிருடன் ஏற்றுமதி (Live export) என்பது தேசிய எல்லைகளைக் கடந்து கால்நடைகளை ஏற்றுமதி செய்யும் நோக்கில் நிகழும் வணிகப் போக்குவரத்து ஆகும். பல நாடுகளின் பங்களிப்பைக் கொண்ட வர்த்தகத்தை உள்ளடக்கியது இதில் ஆஸ்திரேலியா முதன்மை வகிக்கிறது. ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி (Australian Bureau of Statistics), மார்ச் 2017 மற்றும் மார்ச் 2018-க்கு இடையில் உயிருள்ள செம்மறி ஆடுகளின் ஏற்றுமதி 21.4% அளவிற்கும் உயிருள்ள கன்றுகளின் ஏற்றுமதி 9.7% அளவிற்கும் அதிகரித்துள்ளது. 2017-ல் மட்டும், ஆஸ்திரேலியா 2.85 மில்லியன் உயிருள்ள விலங்குகளை கப்பல் கொள்கலன்கள் மூலமும் விமானங்களின் மூலமும் ஏற்றுமதி செய்துள்ளது.[1] அதிக எண்ணிக்கையிலான விலங்குகளை ஏற்றிச் செல்ல வேண்டிப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கப்பல்களின் மூலம் இவ்வர்த்தகம் விரிவடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கால்நடைகளின் அளவு 2014 மற்றும் 2017-க்கு இடையில் கிட்டத்தட்ட 586 மில்லியன் கிலோகிராம் வரை உயர்ந்துள்ளது. இது அந்தக் காலகட்டத்தில் 62.5% அதிகரிப்பு ஆகும்.

உலக அளவில் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால், கடந்த அரை நூற்றாண்டில் உயிருள்ள பண்ணை விலங்குகளின் ஏற்றுமதி நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. 2007-ல் ஒரு பில்லியனாக இருந்த இவ்வேற்றுமதி 2017-ல் இரண்டு பில்லியனாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து மில்லியன் விலங்குகள் இவ்வர்த்தகப் போக்குவரத்துக்கு ஆட்படுத்தப்படுகின்றன.[2]

விலங்குரிமை மற்றும் தார்மீக அடிப்படையில் இத்தொழிற்துறையானது விலங்குரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.[2][3] விலங்குகளின் நலன் பற்றிய கவலை காரணமாக 2007-ம் ஆண்டு முதல் அறுப்புக்காக உயிருடன் ஏற்றுமதி செய்வதை நியூசிலாந்து திறம்பட நிறுத்தியுள்ளது.[4]

மேலும் காண்க

ஆதாரங்கள்

  1. Daragahi, Borzou (30 July 2018). "'This one has heat stress': the shocking reality of live animal exports". The Guardian. https://www.theguardian.com/environment/2018/jul/30/this-one-has-heat-stress-the-shocking-reality-of-live-animal-exports. 
  2. 2.0 2.1 Osborne, Hilary; van der Zee, Bibi (January 20, 2020). "Live export: animals at risk in giant global industry". The Guardian. https://www.theguardian.com/environment/2020/jan/20/live-export-animals-at-risk-as-giant-global-industry-goes-unchecked. 
  3. "Export Misery". Mercy for Animals. பார்க்கப்பட்ட நாள் January 23, 2021.
  4. "Is it true that New Zealand has banned live export?". Ban Live Export. Animals Australia.

வெளி இணைப்புகள்