உற்சவர்

மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியும், சொக்கநாதரும் உற்சவ சிற்பங்களாக

உற்சவர் என்பது இந்துக் கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காகத் தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.

உற்சவ மண்டபம்

பெரிய கோவில்களில் உற்சவருக்கென தனி மண்டபம் அமைத்து அதில் உற்சவரை வைத்திருக்கின்றார்கள். அம்மண்டபம் உற்சவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. தனித்த மண்டபம் இல்லாத கோவில்களில் உற்சவர் சிலை மூலவருக்கு அருகிலேயே வைக்கப்படுகிறது.

சிறப்பு

சில கோவில்களில் மூலவருக்கு அபிசேகங்கள் செய்ய இயலாத நிலையில் உற்சவருக்கு மட்டுமே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், உற்சவருக்கே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.

உற்சவரை மூலவருக்குப் பிரதிநிதியாக விழாக்களில் கொண்டாடுகிறார்கள். சில கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன. உற்சவ வேளைகளில் மூலவரை விட உற்சவருக்கே சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. [1] சில கோயில்களில் மூலவரே உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். [2]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=963162 உற்சவர் சிலை கீழே விழுந்ததால் பிரதோஷ வழிபாடு நிறுத்தம் -தினமலர் 27 ஏப் 2014
  2. முனைவர் தா.அனிதா (18 அக்டோபர் 2018). "கம்பன் வணங்கிய கலைமகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2018.

வெளி இணைப்புகள்