உலகப் பொருளாதார மன்றம்

உலக பொருளாதார மன்றம்
உருவாக்கம்1971
வகைபொதுநலசேவை
தலைமையகம்கோலோக்னி , சுவிசர்லாந்து
சேவை பகுதி
உலகளாவிய சந்திப்புகள்
க்லௌஸ் ஷ்வாப்
வலைத்தளம்http://www.weforum.org/

உலக பொருளாதார மன்றம் ஜெனீவா நகரை மையமாக கொண்ட ஒரு பொதுநலசேவை அமைப்பாகும். இவ்வமைப்பின் வருடாந்திர குழுமம் சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முக்கியம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பங்குபெறும் இந்த குழுமத்தில் சுற்றுபுறசூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.[1][2][3]

மேலும், இம்மன்றம் சீன நாட்டில் "புதிய சாம்பியன்களின் வருடாந்திர சந்திப்பு" ("Annual Meeting of the New Champions") எனும் குழுமத்தையும், மற்றும் பல இடங்களில் பிராந்திய குழுமங்களையும் வருடம் முழுதும் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஐரோப்பா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, ரஷ்யா முதன்மை செயல் அதிகாரிகள் வட்டசபை, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன அமெரிக்கா போன்ற இடங்களில் இவ்வமைப்பு சந்தித்தது.

2008 ஆம் ஆண்டு துபாயில் பல்வேறு துறைகளை சார்ந்த 700 வல்லுனர்கள் பங்குபெற்ற "உலகளாவிய நிகழ்வுபட்டியலின் துவக்க சந்திப்பு " (Inaugural Summit on the Global Agenda) நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் உலகின் தற்போதைய 68 முக்கியமான பிரச்சனைகள் கண்டெடுக்கப்பட்டது.

உலக பொருளாதார மன்றம் 1971 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த க்லௌஸ் ஷ்வாப் என்னும் பொருளியல் பேராசிரியரால் நிறுவப்பட்டது. மேலும், இந்நிறுவனம் பல்வேறு துறைகளை சேர்ந்த உறுப்பினர்களை ஆராய்ச்சிகள் நடத்த உதவுகின்றது.

க்லௌஸ் ஷ்வாப், முதன்மை செயல் அதிகாரி, உலக பொருளாதார மன்றம்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
World Economic Forum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளியீடுகள்

மேற்கோள்கள்

  1. "World Economic Forum". LobbyFacts (in ஆங்கிலம்). Archived from the original on 12 November 2021.
  2. "Our Mission". World Economic Forum. Archived from the original on 21 July 2021. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  3. Pigman, Geoffrey Allen (2007). The World Economic Forum – A Multi-Stakeholder Approach to Global Governance. London: Routledge. pp. 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-70204-1.