உலர் கூனி இறால்
உலர் கூனி இறால் (Dried Shrimp) என்பது வெயிலில் உலர்த்தப்பட்டு சுருங்கிய சிறு இறால் வகையைக் குறிக்கும். இது கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியா ஆகியப் பகுதிகளின் உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்துவமான உமாமி சுவையை அளிக்கிறது.[1] ஒரு சில இறால் பொதுவாக உணவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வேகவைத்தப் பிறகு இவற்றின் சுவை வெளிப்படுகிறது.
தெற்காசியா
இந்தியாவில் ஒடிசா, கொங்கன், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் உணவு வகைகளில் கூனி இறால் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில் சென்னா குன்னி என்றும் ஆந்திராவில் ரொய்யா பப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையில், கூனிஸ்ஸோ மல்லும் அல்லது போல் மல்லும் என்றழைக்கப்படும் பிரபலமான உணவில் சேர்க்கப்படும் பொருட்களில் கூனி இறால் முக்கியமானதாகும்.
மேற்கோள்கள்
- ↑ Zhu, Maggie. "Dried Shrimp". Omnivore's Cookbook (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.