உலூனா 24

 

உலூனா 24 என்பது சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் எந்திரனியல் ஆய்வு ஆகும். உலூனா 24 விண்கலத்தின் 24 வது பணி , மூன்றாவதாக நிலாவில் இருந்து நிலா மண் பதக்கூறுகளைக் கொணர்வதாகும் (முதல் இரண்டு பதக்கூறு கொணரும் பயணங்கள் உலூனா 16, உலூனா 20 ஆகியனவாகும். இந்த ஆய்கலம் மேர் கிறிசியத்தில் (நெருக்கடிக் கடலில்) தரையிறங்கியது. இந்த விண்கலம் 1976 ஆகத்து 22 அன்று 170.1 கிராம் (6 அவுன்ஸ்) நிலாப் பதக்கூறுகளை புவிக்குக் கொணர்ந்தது.

கொணர்ந்த பதக்கூறுகளில் தண்ணீர் கண்டுபிடிப்பு

1978 பிப்ரவரியில் சோவியத் அறிவியலாளர்களாகிய எம். அக்மனோவா, பி. தெமெந்தேவ் வெர்னத்சு புவி வேதியியல், பகுப்பாய்வு வேதியியல் நிறுவன எம். மார்கோவ் ஆகியோர் தண்ணீரை மிகவும் உறுதியாகக் கண்டறிந்ததாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.[1][2] அகச்சிவப்பு உறிஞ்சுதல் கதிர்நிரல் பதிவியில் (சுமார் 3 μமீ அலைநீளம்) கண்டறிதல் மட்டத்தில் நுழைவாயிலுக்கு மேலே 10 மடங்கு காணப்படுவது போல் ஆய்வின் மூலம் புவிக்குக் கொணர்ந்த பதக்கூறுகள் சுமார் 0.01% அளவுக்குத் தண்ணீரைக் கொண்டிருந்தன என்று அவர்களின் ஆய்வு காட்டுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Akhmanova, M.; Dement'ev, B.; Markov, M. (February 1978). "Water in the regolith of Mare Crisium (Luna-24)?" (in ru). Geokhimiya (285). 
  2. Akhmanova, M.; Dement'ev, B.; Markov, M. (1978). "Possible Water in Luna 24 Regolith from the Sea of Crises". Geochemistry International 15 (166). 

வெளி இணைப்புகள்