உஸ்மானியே மாகாணம்
உஸ்மானியே மாகாணம்
Osmaniye ili | |
---|---|
துருக்கியில் உஸ்மானியே மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மத்திய தரைக்கடல் |
துணைப்பகுதி | ஹேடே |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | மூஸ் |
• ஆளுநர் | எர்டினா யால்மாஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,767 km2 (1,454 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 5,34,415 |
• அடர்த்தி | 140/km2 (370/sq mi) |
இடக் குறியீடு | 0328 |
வாகனப் பதிவு | 80 |
இணையதளம் | http://osmaniye-bld.gov.tr |
உஸ்மானியே மாகாணம் (Osmaniye Province, துருக்கியம்: Osmaniye ili ) தெற்கு துருக்கியில் அமைந்துள்ள ஒரு துருக்கிய மாகாணமாகும் . 1933 ஆம் ஆண்டு வரை, அதாவது அதானா மாகாணத்துடன் இணைக்கப்பட்டும் வரை, இது முந்தைய குடியரசில் செபல்-ஐ பெரெக்கெட் (அதாவது "வளமான மலை" என்று பொருள்) என்ற பெயரில் ஒரு மாகாணமாக இருந்தது. இது 1996 இல் மீண்டும் ஒரு மாகாணமாக மாற்றப்பட்டது. இது 3,767 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மக்கள் தொகை 479,221 (2010 கணக்கு) ஆகும். இந்த மாகாணம் புவியியல், பொருளாதாரம், கலாச்சார பிராந்தியமான சுகுரோவாவில் அமைந்துள்ளது.
மாகாணத்தின் தலைநகராக உஸ்மானியே (மக்கள் தொகை: 194,000) உள்ளது. அடுத்தடுத்த மிகப்பெரிய நகரங்களாக கதிர்லி (மக்கள் தொகை: 83,618) மற்றும் டெசி (மக்கள் தொகை: 42,000) ஆகியன உள்ளன.
மாவட்டங்கள்
உஸ்மானியே மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- பஹே
- டிகிசிசி
- ஹசன்பேலி
- கதிர்லி
- உஸ்மானியே
- சும்பாஸ்
- டோபிரக்கலே
வரலாற்று தளங்கள் மற்றும் இடிபாடுகள்
- கராத்தேப் - அஸ்லாண்டாஸ் (டோமுஸ்டெப்-பெனாரஸா) - கதிர்லி / டேசிசி
- 2018 ஆம் ஆண்டில், பண்டைய மொசைக்கு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொசைக்கின் ஒன்றில் முள்ளங்கி ஒன்றை சித்தரித்து காட்டுகிறது. அதில் திராட்சை வைத்திருக்கும் ஒரு மனித உருவமும், கையில் ஒரு கௌதாரியும் உள்ளது. கூடுதலாக, இது கிரேக்க எழுத்தைக் கொண்டுள்ளது. இது முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று நம்பப்படுகிறது. [2]
குறிப்பிடத்தக்க நபர்கள்
- யாகர் கெமல், குர்திஷ் எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் மற்றும் துருக்கியில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர்
- டெவ்லெட் பஹெலி, துருக்கிய அரசியல்வாதி
- சமேத் அய்பாபா, கால்பந்து மேலாளர்
- அஹ்மத் யில்டிரிம், கால்பந்து மேலாளர்
விழாக்கள்
- கரகுக்கக் மல்யுத்த விழா - கதிர்லி (மே 25–26)
காட்சியகம்
-
உஸ்மானியிலுள்ள பண்டைய நகரமான ஹைரபோலிஸ் காஸ்டபாலா
-
உஸ்மானியே நகரத்திலிருந்து ஒரு தோற்றம்
-
சோளக் கொல்லையும், நீர்ப்பாசன கால்வாயும்
குறிப்புகள்
- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
- ↑ Ancient mosaics discovered in southern Turkey