எக்சோ (இசைக்குழு)
எக்சோ | |
---|---|
எக்சோ குழுவினர் சித்திரை மாதம் இடமிருந்து வலமாக, நிற்கிறது: பைன் பேக்கியுன், சென், லே ஷாங், ஓ சேஹன், பார்க் சானியோல், டோ கியுங்சோ, காய், சுஹோ, க்சியூமின். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | சியோல், தென் கொரியா |
இசை வடிவங்கள் |
|
இசைத்துறையில் | 2012–தற்பொழுது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் அவெக்ஸ் ட்ராக்ஸ் |
இணைந்த செயற்பாடுகள் |
|
இணையதளம் | exo |
உறுப்பினர்கள் |
|
முன்னாள் உறுப்பினர்கள் |
|
எக்சோ (கொரிய மொழி: 엑소) என்பது சியோல் நகரில் உள்ள ஒன்பது (பைன் பேக்கியுன், சென், லே ஷாங், ஓ சேஹன், பார்க் சானியோல், டோ கியுங்சோ, காய், சுஹோ, க்சியூமின்) உறுப்பினர்களை கொண்ட தென் கொரியா - சீனா நாட்டு ஆண்கள் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு 2011ஆம் ஆண்டு எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் உருவாகி 2012 இல் அறிமுகமானது. இந்த குழுவினர் பரப்பிசை, ஹிப் ஹாப் மற்றும் ஆர்&பி போன்ற வகை இசைகளை உருவாக்குகின்றனர். இந்த எக்சோ இசைக்குழு கொரியன், மாண்டரின் மற்றும் சப்பானிய மொழிளில் இசைகளை வெளியிட்டு வருகின்றது. 2014 முதல் 2018 வரை ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் கொரியா பவர் செலிபிரிட்டி பட்டியலில் முதல் ஐந்து செல்வாக்கு மிக்க பிரபலங்களில் ஒருவராக இந்த இசைக்குழு இடம் பெற்றுள்ளது, மற்றும் "உலகின் மிகப்பெரிய ஆண்கள் இசைக்குழு" மற்றும் ஊடக நிறுவனங்களால் "கே-பாப் மன்னர்கள்" என்று அழைக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு முதல் எக்சோ தனித்துவம் வாய்த்த குழுவாக திகழ்கின்றது. இந்த குழு ஒரு இசை காணொளியை பல மொழிகளில் வெளியிடுகிறது. முன்னதாக, இசைக்குழு பன்னிரண்டு உறுப்பினர்களுடன் இரண்டு துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டது: எக்சோ-கே (சுஹோ, பைன் பேக்கியுன், பார்க் சானியோல், காய், மற்றும் ஓ சேஹன்) மற்றும் எக்சோ-எம் (க்சியூமின், சென் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கிரிஸ் வு, லு ஹான் மற்றும் டவோ).
பின்னணி
2011 ஆம் ஆண்டில், எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் தலைவர் 'லீ சோமன்' ஒரு புதிய ஆண் இசைக்குழுவின் மூலம் இரண்டு துணைக் குழுக்களாக உருவாக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் திடடம் தென் கொரியா மற்றும் சீனாவில் ஒரே நேரத்தில் கொரியன் மற்றும் மாண்டரின் மொழிளில் பாடல்களை பாடி வெளியிடுவது ஆகும்.[1][2] டிசம்பர் 2011 இல் பல உறுப்பினர் மாற்றங்களுக்குப் பிறகு குழு அதன் பெயரை எக்சோ என்று பெயர் செய்தது, இது "எக்ஸோபிளானட்" என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. எக்சோ இசைக்குழு ஒய்.ஜி என்டர்டெயின்மென்டின் புதிய பெண்கள் குழுவுடன் போட்டியிடும் என்று கருதப்பட்டது.[3]
வரலாறு
எக்சோ-கே தலைவரான சுஹோ ஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்டில் சேர்ந்த முதல் உறுப்பினராவார். இவர் 2006 ல் நடத்த தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு காய் தனது தந்தையின் ஊக்கத்துடன், எஸ்.எம். யூத் பெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். இதில் வெற்றி பெற்று எக்சோவின் குழுவில் இரண்டாவது அங்கத்தவராக நுழைந்தார்.[4] ஸ்மார்ட் மாடல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பார்க் சானியோல் மற்றும் இரண்டு ஆண்டுகளில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்ட ஓ சேஹன் அடுத்தடுத்த அங்கத்தவ பயிற்சியாளர்களாக 2008ல் உறுப்பினரானார்கள்.[5] 2010 இல் எக்சோ-கே டோ கியுங்சோ தேர்வு மூலம் இக்குழுவில் சேர்ந்தார்.[6] கடைசி உறுப்பினராக பைன் பேக்கியுன் சேர்ந்தார். இவர் 2011 இல் எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் நடத்திய நடிப்பு திறன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு இக் குழுவில் சேர்வதற்கு சுமார் ஒரு வருடகாலம் பயிற்சி பெற்றார்.
2008 இல் உலகளாவிய எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் நடத்திய தேர்வில் கிரிஸ் வு தேர்வு செய்யப்பட்டு தென் கொரியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அதே ஆண்டில் சீனாவில் நடந்த தேர்வு மூலம் லே ஷாங் தென் கொரியாவுக்கு பயிற்சிக்கு சென்றார். அதே நேரத்தில் க்சியூமின் தனது நண்பருடன் ஒரு தேர்வில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[7] 2010ஆம் ஆண்டில் சியோலில் நடந்த தேர்வு மூலம் லு ஹான் தேர்வானார், டவோ ஒரு திறமை போட்டியில் கலந்து கொண்டு தேர்வானார். இந்த குழுவின் இறுதி அங்கத்துவரராக சென் 2011ஆம் ஆண்டில் தேர்வானார். இக் இசைக்குழுவின் முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி டிசம்பர் 29, 2011ஆம் ஆண்டில் எஸ்.பி.எஸ். கயோ டீஜியோன் என்ற நிகழ்ச்சி ஆகும்.[8]
உறுப்பினர்கர்கள்
- பைன் பேக்கியுன்
- சென்
- லே ஷாங்
- ஓ சேஹன்
- பார்க் சானியோல்
- டோ கியுங்சோ
- காய்
- சுஹோ
- க்சியூமின்
முன்னாள் உறுப்பினர்கள்
- லு ஹான்
- கிரிஸ் வு
- டவோ
மேற்கோள்கள்
- ↑ Cho, Woo-young (2011-11-22). "SM 신예 2팀 드디어 출격..샤이니 이후 4년만 `기대`". EDaily இம் மூலத்தில் இருந்து May 4, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190504140157/http://www.edaily.co.kr/news/read?newsId=01161126596481144&mediaCodeNo=258.
- ↑ Seabrook, John (2012-10-01). "Factory Girls". The New Yorker. https://www.newyorker.com/magazine/2012/10/08/factory-girls-2. பார்த்த நாள்: 2019-05-04.
- ↑ Kwon, Suk-bin (2011-11-14). "SM 보이그룹 vs YG 걸그룹, 내년 新아이돌 자존심 성대결". Newsen. http://www.newsen.com/news_view.php?uid=201111141725051002.
- ↑ (in ko). June 5, 2012. http://joynews.inews24.com/php/news_view.php?g_menu=700100&g_serial=662884&rrf=nv.
- ↑ (in ko-KR)Star News. December 10, 2015. http://star.mt.co.kr/stview.php?no=2015121023310121100&outlink=1&ref=.
- ↑ (in ko). Oh My News via Oh My Star. May 11, 2012 இம் மூலத்தில் இருந்து July 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130728200305/http://star.ohmynews.com/NWS_Web/OhmyStar/at_pg.aspx?CNTN_CD=A0001731067. பார்த்த நாள்: May 11, 2012.
- ↑ . March 16, 2018. http://osen.mt.co.kr/article/G1110855835.
- ↑ Newsen. 2011-12-29. http://www.newsen.com/news_view.php?uid=201112292232371001.