எடித் பியாஃப்

எடித் பியாஃப்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எடித் கியோவன்னா காசியன்
பிற பெயர்கள்La Môme Piaf
(The Little Sparrow)
பிறப்பு(1915-12-19)19 திசம்பர் 1915
பெல்லேவில், பாரிசு, பிரான்சு
இறப்பு10 அக்டோபர் 1963(1963-10-10) (அகவை 47)
Plascassier, பிரான்சு
இசை வடிவங்கள்cabaret
torch songs
chanson
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நடிகை
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்1935 – 1963

எடித் கியோவன்னா காசியன் என்னும் இயற்பெயர் கொண்ட எடித் பியாஃப் (Édith Piaf) ஒரு பிரான்சியப் பாடகரும், பண்பாட்டுச் சின்னமும் ஆவார். பிரான்சின் மக்களாதரவு பெற்ற மிகச் சிறந்த பாடகர் இவர் எனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் இவரது வாழ்க்கையைக் காட்டுவதாக அமைந்தன. "பல்லாட்" என்ற வகைப் பாடல்களே இவருக்கு மிகவும் கைவந்த பாடல்வகையாகும்.

இளமைக்காலம்

பலர் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள போதும், இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி தெளிவாக அறியப்படாததாகவே உள்ளது. இவர் பாரிசில் பெருமளவில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் வசித்த பெல்லேவில் என்னும் இடத்தில் பிறந்தார். சில கதைகள் இவர் ரூ டி பெல்லவில் என்னும் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் பிறந்ததாகக் கூறுகின்றன. எனினும், இவரது பிறப்புச் சாட்சிப் பத்திரம் பெல்லேவில்லையும் உள்ளடக்கிய 20ஆவது அரொன்டைசுமென்ட் எனப்படும் இடத்திலுள்ள மருத்துவ மனையில் பிறந்ததாகக் கூறுகின்றது.

குறிப்புகள்