எண்கணித எண்

எண் 6 இன் எண்கணிதத் தன்மையை குசெனைரின் கோல்கள் கொண்டு விளக்கும் படம்

எண் கோட்பாட்டில் ஒரு முழு எண்ணின் நேர் வகுஎண்களின் கூட்டுச் சராசரியும் ஒரு முழு எண்ணாக இருந்தால் அந்த மூல முழுஎண் எண்கணித எண் (arithmetic number) எனப்படும்.

எடுத்துக்காட்டு:

  • 6 ஒரு எண்கணித எண்.
  • 2 ஒரு எண்கணித எண் அல்ல. ஏனென்றால் அதன் வகுஎண்கள் 1, 2. இவற்றின் சராசரி 3/2 என்பது ஒரு முழுஎண்ணல்ல.

எண்கணித எண்களின் தொடர்வரிசையில் துவக்க எண்கள் சில:

1, 3, 5, 6, 7, 11, 13, 14, 15, 17, 19, 20, 21, 22, 23, 27, 29, 30, 31, 33, 35, 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, ... (OEIS-இல் வரிசை A003601)

அடர்த்தி

எண்கணித எண்களின் இயல் அடர்த்தி 1 ஆகும்[1][2]

ஒரு எண் N இன் வகுஎண் சார்பு d(N) ஆனது அதன் வகுஎண்களின் கூட்டுச்சார்பை (σ(N)) வகுக்குமானால் N ஒரு எண்கணித எண்ணாக இருக்கும். σ(N) ஐ d(N)2 வகுக்கும் என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் முழுஎண்களின் அடர்த்தி 1/2.[1][2]

குறிப்புகள்

  1. 1.0 1.1 Guy (2004) p.76
  2. 2.0 2.1 Bateman, Paul T.; Erdős, Paul; Pomerance, Carl; Straus, E.G. (1981). "The arithmetic mean of the divisors of an integer". In Knopp, M.I. (ed.). Analytic number theory, Proc. Conf., Temple Univ., 1980 (PDF). Lecture Notes in Mathematics. Vol. 899. இசுபிரிங்கர் பதிப்பகம். pp. 197–220. Zbl 0478.10027.

மேற்கோள்கள்