என்றியேட்டா கில் சுவோப்
என்றியேட்டா கில் சுவோப் Henrietta Hill Swope | |
---|---|
பிறப்பு | புனித உலூயிசு, மிசவுரி | அக்டோபர் 26, 1902
இறப்பு | நவம்பர் 24, 1980 இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா[1] | (அகவை 78)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கார்னிகி அறிவியல் நிறுவனம் |
அறியப்படுவது | பால்வெளிகளின் தொலைவுகள் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது]] (1968) |
என்றியேட்ட கில் சுவோப் (Henrietta Hill Swope) (அக்தோபர் 26, 1902 – நவம்பர் 24, 1980)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலிவான மாறும் விண்மீன்கள் ஆகும். இவற்றின் அலைவுநேர அளவீடுகள் அவற்ரின் தொலைவுகளோடு உறவுள்ளவை. எனவே இத்தொலைவுகளை வைத்து பால்வழியின் உருவளவையும் அதிலிருந்தான மற்ற பால்வெளிகளின் தொலைவுகளையும் கண்டறியலாம்.
தகைமைகளும் விருதுகளும்
- வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 1968
- சிறுகோள் 2168 சுவோப் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
- பெர்னார்டு தகைமை முன்னாள் மாணவர் விருது, 1975
- The Swope Telescope[தொடர்பிழந்த இணைப்பு] இவரது நினைவாக சிலியில் உள்ள இலாசு கம்பனாசு வாண்காணகத்தின் சுவோப் தொலைநோக்கி பெயரிடப்பட்டது.
- சுவிட்சர்லாந்து பேசல் பல்கலைக்கழகம் 1975 இல் இவருக்குத் தகைமை முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
- பெர்னார்டு கல்லூரி தகைமைப் பதக்கம், 1980
மேற்கோள்கள்
- ↑ "California Death Index, 1940-1997". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
- ↑ "Obituary: Henrietta H. Swope". Physics Today 34 (3): 88. March 1981. doi:10.1063/1.2914495. Bibcode: 1981PhT....34Q..88.. http://www.physicstoday.org/resource/1/phtoad/v34/i3/p88_s1?bypassSSO=1.
வெளி இணைப்புகள்
- Henrietta Hill Swope Papers.Schlesinger Library பரணிடப்பட்டது 2012-05-09 at the வந்தவழி இயந்திரம், Radcliffe Institute, Harvard University.
- http://www.aip.org/history/ohilist/4909.html பரணிடப்பட்டது 2015-01-12 at the வந்தவழி இயந்திரம்