என் எச் பி சி நிறுவனம்

என் எச் பி சி நிறுவனம்
வகைஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை7 நவம்பர் 1975
தலைமையகம்பரிதாபாத், அரியானா, இந்தியா[1]
முதன்மை நபர்கள்தலைவர் & நிர்வாக இயக்குநர்
தொழில்துறைநீர் மின் ஆற்றல்
உற்பத்திகள்மின்சாரம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல்
வருமானம்Increase 10,770 கோடி (US$1.3 பில்லியன்)
இயக்க வருமானம்Increase 5,054.56 கோடி (US$630 மில்லியன்)
மொத்தச் சொத்துகள்Increase 73,157 கோடி (US$9.2 பில்லியன்)
மொத்த பங்குத்தொகைIncrease 23,045 கோடி (US$2.9 பில்லியன்)
உரிமையாளர்கள்இந்திய அரசு (70.95%)
பணியாளர்4,786 (செப்டம்பர் 2024)
இணையத்தளம்https://www.nhpcindia.com/

என் எச் பி சி நிறுவனம் (முன்னர் இதன் பெயர் தேசிய புனல் மின்னாற்றல் நிறுவனம்--National Hydroelectric Power Corporation), இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் நீர் மின் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து[2], விற்பனை செய்கிறது. தற்போது இந்நிறுவனம் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் இந்திய அரசின் 70.95% ஆகும்.

2024ல் இந்நிறுவனம் நவரத்தின நிறுவனமாக இந்திய அரசு அறிவித்தது.[3] 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேரில் காற்றாலைகள் மூலம் 50 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைத் துவக்கியது. [4]

இந்நிறுவனத்தின் ஆளுகையில் 24 நீர் மின்நிலையங்களும்[5], 9 திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது.[6] ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் நீர் மின் நிலையங்கள் மூலம் 1230 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் தொடர்ந்து இலாபம் ஈட்டி வருவதால், ஆகஸ்டு 2024ல் இந்திய அரசு நவரத்தினம் நிறுவனம் என்ற தகுதியை வழங்கியது. [7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்