எரிமாந்தியன் காட்டுப்பன்றி
ஹெராக்கிள்ஸ், யூரிஸ்டியஸ் மற்றும் எரிமந்தியன் பன்றி. உருவம் கொண்ட பண்டைய கிரேக்க கருப்பு அம்ப்போரா மதுச்சாடி, காலம் கிமு 525, எட்ருரியாவிலிருந்து.இலூவா அருங்காட்சியகம், பாரிசு. | |
குழு | பழங்கதை உயிரினம் |
---|---|
தொன்மவியல் | கிரேக்கத் தொன்மவியல் |
நாடு | கிரேக்கம் |
வாழ்விடம் | கெரினியா, கிரேக்கம் |
எரிமாந்தியன் பன்றி (Erymanthian Boar, கிரேக்கம் : ὁ Ἐρυμάνθιος κάπρος; இலத்தீன் : Erymanthius aper) என்பது கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு காட்டுப் பன்றி ஆகும். இது "மயிரடர்ந்த" [1] "கட்டுக்கடங்காத" [2] "மிகவும் எடை " கொண்ட "பன்றி"யாகும் . [3] " மேலும் இதன் தாடைகளில் நுரையைக் கொண்டது ".இது "எரிமந்தஸின் பரந்த சதுப்பு நிலத்திற்கு" அருகிலுள்ள. "லம்பீயாவின் க்ளென்சில்" வாழ்ந்தது. [4] இது எரிமாந்தஸ் மலையடிவாரத்திலிருந்த நிலங்களில் கிழங்குகளையும், வேர்களையும், விதைகளையும், கொட்டைகளையும் தோண்டித் தின்று வந்ததுடன், கழனிகளையும் பாழாக்கிவந்தது.
எரக்குலிசின் நான்காவது பணியானது இந்த எரிமந்தியன் பன்றியை உயிருடன் மைசீனாவிலுள்ள யூரிஸ்டீயசிடம் கொண்டுவருவதாகும். [4] பன்றியைப் பிடிக்க வந்த, எர்குலிஸ் முதலில் "பன்றியை கூச்சல் போட்டபடி துரத்தினார்" [5] அதன் மூலம் அதை "ஒரு குறிப்பிட்ட புதரிலிருந்து" திசைதிருப்பினார். ஒடியோடி "முற்றிலும் சோர்ந்துபோன விலங்கை பனிநிறைந்த ஆழமான குழியில் விழுதாறு செய்தார்." பின்னர் "குழியில் அகப்பட்ட", அதை சங்கிலிகளால் பிணைத்து, தன் வலையினுள் தள்ளி", [6] வலையைத் தன் இடது தோள்மீது துக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார், "காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தால் முதுகில் கறை படிந்த அவர்" அதை "மைசீனியர்களின் கூட்டத்தின் நுழைவாயிலில்" கீழே எறிந்தார், இதனால் தனது நான்காவது பணியை முடித்தார். "மன்னர் [யூரிஸ்டியஸ்] எர்குலிஸ் தன் தோளில் பன்றியை சுமந்து வருதைக் கண்டதும், பயந்துபோய் தனக்காக அமைத்திருந்த பித்தளை அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டார்." [7]
குறிப்புகள்
- ↑ "Hercules Furens 228 ff.". Seneca's Tragedies. Vol. 1. London; New York: William Heinemann; G. R Putnam's Sons. 1917. p. 21. ark:/13960/t71v5s15x.
- ↑ "The Fall of Troy, Book VI. 220 ff.". Quintus Smyrnaeus The Fall Of Troy. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1984. p. 271. ark:/13960/t2m61f62d.
- ↑ "The Heroides 9. 87 ff". Ovid Heroides And Amores. London; New York: William Heinemann; The Macmillan Co. 1914. p. 115. ark:/13960/t76t0t11q.
- ↑ 4.0 4.1 "The Argonautica. Book 1 67-111". "The Argonautica" of Apollonius Rhodius. London: George Bell And Sons, York Street, Covent Garden. 1889. pp. 8. ark:/13960/t03x8577n.
- ↑ "The Library 2. 5. 3-4". Apollodorus the Library. Vol. 1. New York: G. P. Putnam's Sons. 1921. pp. 191 with the Scholiast. ark:/13960/t00012x9f.
- ↑ "Thebaid, VIII. 731-760. 746 ff.". Statius. London ; New York: William Heinemann Ltd.; G. P. Putnam's Sons. 1928. pp. 249. ark:/13960/t19k4m13k.
- ↑ "Book 4. 12. 1-2". Diodorus of Sicily. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1967. pp. 381. ark:/13960/t7qn6bw6r.