எலிசபெத் லாப்டஸ்
எலிசபெத் எஃப் லாப்டஸ் | |
---|---|
2010 இல் லாப்டஸ் | |
பிறப்பு | எலிசபெத் பிஷ்மேன் October 16, 1944 (வயது 80) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா U.S.[1] |
வாழிடம் | கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா. |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா. |
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
துறை | உளவியல், Cognitive Psychology, Psychology and Law |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) வாஷிங்டன் பல்கலைக்கழகம் நியூ ஸ்கூல் பல்கலைக்கழகம் தேசிய சட்டக் கல்லூரி, நவேதா பல்கலைக்கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழக சட்டமையம் |
கல்வி கற்ற இடங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
ஆய்வு நெறியாளர் | பாட்ரிக் சப்பஸ் |
அறியப்படுவது | மனித நினைவாற்றல் குறித்த ஆய்வுகள் மற்றும் குற்றவியல் அமைப்புகளில் அதனுடைய பயன்பாடுகள் |
விருதுகள் | கிராவ் மேயர் விருது (2005) ஐக்கிய அமெரிக்காவின் அறிவியல் தேசிய அகாதமி விருது(2004) எடின்பர்க் ராயல் கழக விருது (2005) |
துணைவர் | ஜாஃப்ரி லாப்டஸ் (தி. 1968; விவாகரத்து 1991) |
எலிசபெத் எஃப். லாப்டஸ் (Elizabeth Loftus இயற்பெயர்:எலிசபெத் பிஷ்மேன், அக்டோபர் 16, 1944) [2][3][4] ஒரு அமெரிக்க அறிவாற்றல் உளவியலாளர் மற்றும் மனித நினைவாற்றல் நிபுணர் ஆவார். லாப்டஸ் தவறான் தகவல்களின் விளைவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் நினைவுகள்,[5] நினைவுருவாக்கம், குழந்தைப்பருவத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை [6] உள்ளிட்ட இயற்கைக்கு மாறான தவறான நினைவுகளின் இயல்புகள் [7] ஆகியவற்றை மீட்டுக் கொணரும் உளவியல் முறைகளில் சிறந்த அவரது முன்னோடிப் பணிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர், ஆவார். அவர் மனித நினைவகத்தின் தன்மை பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். நாம் சொல்லும் விடயங்கள் மூலம் நினைவுகள் எவ்வாறு மாற்றப்படலாம் என்பதை அவனுடைய சோதனைகள் வெளிப்படுத்துகின்றன.[8]
ஆய்வகத்திற்குள்ளே அரும்பணிகளைச் செய்த அதே நேரத்தில், லாப்டஸ் தனது ஆய்வுகளைச் சட்ட அமைப்புகளுக்குப் பயன்படுத்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்; அவர் நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு ஆலோசனைகள் அல்லது நிபுண சாட்சியாக சாட்சியம் வழங்கினார் [6][9] லாப்டஸ் தனது பணிகளுக்காக உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றார், பல்வேறு விருதுகள் மற்றும் மதிப்புறு பட்டங்களைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், ரிவ்யூ ஆஃப் ஜெனரல் சைக்காலஜி என்ற இதழ் வெளியிட்ட, இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குள்ள 100 உளவியல் ஆய்வாளர்களின் பட்டியலில் லாப்டஸ் 58 ஆவது இடம் பெற்றார். மேலும் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்ற பெண்மணியாகவும் இடம் பிடித்தார்.[10]
வரலாறு
எலிசபெத் லாப்டஸ் 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். பெல் ஏர் நகரில் வளர்ந்த லாப்டஸ்,[11] அவருடைய தந்தை சிட்னி ஒரு மருத்துவர் ஆவார். தாய் ரெபெக்கா பிஷ்மேன் ஒரு நூலகர் ஆவார்.[11] லாப்டசுக்கு 14 வயதாகும் பொழுது அவரது தாயார் ஒரு விபத்தில் நீரில் மூழ்கி இறந்தார்.[9][11]
1966 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கணிதம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டில் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புப் பள்ளியில் தனது முதுகலைப் பட்டத்தையும், 1970 இல், கணித உளவியலில் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றார்.[12] தனது குடும்பத்தில் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்ற ஒரே பெண்மணி இவராவார். 1968 ஆம் ஆண்டில், உளவியலாளர் ஜெஃப்ரி லாப்டஸ் என்பவரை மணந்தார்,; 1991 இல் விவாகரத்து பெற்றார்.[9][11] ஆனால் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.[13][14] லாப்டசுக்குக் குழந்தைகள் கிடையாது.[9][11]
மேற்கோள்கள்
- ↑ "Elizabeth Loftus - Psychology History, on the webpage of Muskingum University (archived copy)". Archived from the original on மே 20, 2003. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "Book of Members, 1780–2010: Chapter L" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
- ↑ Bower, GH, (2007). ஒரு நட்சத்திரத்தின் பிறப்பைக் கண்காணித்தல். எம். கேரி & எச். ஹேனே (Eds.), டூ ஜஸ்டிஸ் அண்ட் லெட் தி ஸ்கை வீழ்ச்சி: எலிசபெத் எஃப். லோஃப்டஸ் அண்ட் ஹெர் பங்களிப்புகள் டு சைன்ஸ், லா, அண்ட் அகாடமிக் ஃப்ரீடம் (பக். 15-25). மஹ்வா, என்ஜே: லாரன்ஸ் எர்ல்பாம் அசோசியேட்ஸ்
- ↑ Dr. Elizabeth Loftus: Distinguished Professor of Social Ecology, and Professor of Law, and Cognitive Science at the University of California, Irvine. http://in-sightjournal.com/2013/04/22/dr-elizabeth-loftus-distinguished-psychology-professor-at-university-of-california-irvine/.
- ↑ ஸாரகோஸா, எம்.எஸ்., பெல்லி, ஆர். & பேமெண்ட், கே.ஈ, (2007). தவறான தகவல்கள் மற்றும் சாட்சி மெனுவின் பரிந்துரைப்பு. எம். கேரி & எச். ஹேனே (Eds.), டூ ஜஸ்டிஸ் அண்ட் லெட் தி ஸ்கை வீழ்ச்சி: எலிசபெத் எஃப். லோஃப்டஸ் அண்ட் ஹெர் பங்களிப்புகள் டு சைன்ஸ், லா, அண்ட் அகாடமிக் ஃப்ரீடம் (பக். 35-63). மஹ்வா, என்ஜே: லாரன்ஸ் எர்ல்பாம் அசோசியேட்ஸ்
- ↑ 6.0 6.1 Profile of Elizabeth F. Loftus.
- ↑ Inaugural Article: False beliefs about fattening foods can have healthy consequences.
- ↑ "Elizabeth F. Loftus". UCI School of Social Ecology. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2019.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 9.0 9.1 9.2 9.3 The diva of disclosure, memory researcher Elizabeth Loftus. http://faculty.washington.edu/eloftus/Articles/psytoday.htm. பார்த்த நாள்: 2012-06-12.
- ↑ The 100 most eminent psychologists of the 20th century.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 Saletan. The memory doctor: the future of false memories.
- ↑ "Elizabeth Loftus Biography". Kendra Cherry. www.verywellmind.com. 2018, ஜுலை 1. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2019.
{cite web}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Wilson. "War & remembrance: Controversy is a constant for memory researcher Elizabeth Loftus, newly installed at UCI".
- ↑ Loftus G (2007). "Elizabeth F. Loftus: The early years". Do Justice and Let the Sky Fall: Elizabeth F. Loftus and Her Contributions to Science, Law, and Academic Freedom. Mahwah, NJ: Lawrence Erlbaum Associates. pp. 27–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0805852325.
{cite book}
: Unknown parameter|editors=
ignored (help)