ஏ2 பால்

ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள A2பால்

ஏ2 பால் (A2 Milk) என்பது A2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின் பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கிய புரதம்.[1][2][3] இதில் A1 மற்றும் A2  என இரு வகைகள் உண்டு. A1 வகை பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் A2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப் பசுக்களின் பாலில் அதிகம் காணப்படுகிறது.[சான்று தேவை]

பீட்டா கேசின் புரதச்சங்கிலியில் 67 ஆம் இடத்தில் புரோலின் இருந்தால் அது A1 என்றும் ஹிஸ்டிடின் இருந்தால் அது A2 வகை என்றும் அழைக்கப்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பசுவினங்களில் ஏற்பட்ட மரபணுத் திடீர்மாற்றத்தின் விளைவாக இந்த இரு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவியாலர் நம்புகின்றனர். 

மேற்கோள்கள்