ஒரும எண் முறைமை

ஒரும எண் முறைமையில் எட்டானது பல்வேறு முறைகளில்

ஒரும எண் முறைமை (Unary Numeral System) என்பது ஒன்றை அடியாகக் கொண்ட எண் முறைமை ஆகும்.[1] இயற்கை எண்களைக் காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிக எளிய எண் முறைமை ஒரும எண் முறைமையே ஆகும்.[2]

ஒரும எண் முறைமையில் N என்ற எண்ணைக் காட்டுவதற்கு, குறியீடொன்று N தடவைகள் எழுதப்படும்.[3] | என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, ஆறானது |||||| என்றவாறு காட்டப்படும்.

கணித்தல்கள்

ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டலும் கழித்தலும் இலகுவான செயற்பாடுகளாகும். ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டுவது, ஒன்றிணைப்பை ஒத்தது (எ-டு: ||| + ||||| = ||||||||).[4] ஆனால், ஒரும எண் முறைமையில் அமைந்துள்ள எண்களைப் பெருக்குவதும் பிரித்தலும் சிக்கல் நிறைந்த செயற்பாடுகளாகும்.

ஏனைய எண் முறைமைகளுடனான ஒப்பீடு

பண்டைய எண் முறைமைகளைப் போல ஒரும எண் முறைமையிலும் சுழியம் இல்லை. ஒரும எண் முறைமையில் சுழியத்தையும் இணைத்தால், அது இரும எண் முறைமை ஆகிவிடும்.

மேற்கோள்கள்