ஒர்கான் ஆறு

ஒர்கான் ஆறு
உலான் சுட்கலன் நீர்வீழ்ச்சி

ஒர்கான் ஆறு என்பது மங்கோலியாவில் உள்ள ஒரு ஆறு ஆகும்.

ஒர்கான் என்பது பழைய துருக்கிய மொழி வார்த்தைகளின் இணைப்பு ஆகும். "ஒர்" என்றால் "நடு" என்றும் "கான்" என்றால் "அரசன்" என்றும் பொருள்.

இந்த ஆறு கான்காய் மலைகளில் தோன்றுகிறது.[1] ஒர்கான் ஆற்றுக்கு அருகில் உள்ள உலான் சுட்கலன் ஆறானது ஒரு நீர்வீழ்ச்சியை கொண்டுள்ளது. 10 மீட்டர் அகலம் மற்றும் 20 மீட்டர் உயரமுடைய[2] இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது.

இதன் மொத்த நீளம் 1124 கிலோ மீட்டர் ஆகும். மங்கோலியாவில் உள்ள ஆறுகளில் மிக நீண்ட ஆறு இதுதான்.

இதன் பள்ளத்தாக்கில் இரண்டு பண்டைய சிதிலங்கள் உள்ளன. ஒன்று உய்குர் ராஜ்ஜியத்தின் பண்டைய தலைநகரமான கர் பால்கஸ் மற்றும் மங்கோலியப் பேரரசின் பண்டைய தலைநகரமான கரகோரம்.

இந்த ஆற்றில் கெண்டை, உக்கோ டெய்மன் மற்றும் கெளிறு ஆகிய மீன் வகைகள் காணப்படுகின்றன.

ஒர்கான் பள்ளத்தாக்கை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலக பாரம்பரியக் களமாக பட்டியலிட்டுள்ளது

உசாத்துணை

H. Barthel, Mongolei-Land zwischen Taiga und Wüste, Gotha 1990, p. 34f

  1. "Russian army map "100k--l47-035"". Maps for the world. பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.
  2. [WATERFALL ULAAN TSUTGALAN https://mongolia-guide.com/place/waterfall-ulaan-tsutgalan]