ஒலிம்பிக்கில் பூட்டான்

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில்
பூட்டான்
ப.ஒ.கு குறியீடுBHU
தே.ஒ.குபூட்டான் ஒலிம்பிக் குழு
இணையதளம்bhutanolympiccommittee.org
பதக்கங்கள்
தங்கம்
0
வெள்ளி
0
வெண்கலம்
0
மொத்தம்
0
கோடைக்கால போட்டிகள்
1984 - 1988 - 1992 - 1996 - 2000 - 2004 - 2008 - 2012 - 2016

பூட்டான் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முதலில் 1984 லாஸ் ஏஞ்சலசு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. அன்று முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளிலும் பூட்டான் வில்வித்தைப் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டது. வில்வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டாகும்.[1]

பூட்டான் சார்பாக வில்வித்தை அல்லாத போட்டியில் பங்கேற்ற முதல் போட்டியாளர் குன்சாங் சோடன் என்னும் பெண்மணி ஆவார். இவர் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியிட்டார்.[2] பூட்டான் இதுவரை ஒலிம்பிக் பதக்கம் எதனையும் பெறவில்லை. பூட்டான் மிகவும் மலைப்பாங்கான குளிர் பிரதேசம் ஆனாலும், அந்நாடு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிலும் இதுவரையில் கலந்து கொள்ளவில்லை.

பூட்டான் ஒலிம்பிக் குழு 1983 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது, அதே ஆண்டில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் இவ்வமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.

பதக்க அட்டவணைகள்

கோடைக்கால ஒலிம்பிக் பதக்கங்கள்

போட்டிகள் தடகள வீரர்கள் விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் தரம்
ஐக்கிய அமெரிக்கா 1984 லாஸ் ஏஞ்சலஸ் 6 1 0 0 0 0
தென் கொரியா 1988 சியோல் 3 1 0 0 0 0
எசுப்பானியா 1992 பார்செலோனா 6 1 0 0 0 0
ஐக்கிய அமெரிக்கா 1996 அட்லான்டா 2 1 0 0 0 0
ஆத்திரேலியா 2000 சிட்னி 2 1 0 0 0 0
கிரேக்க நாடு 2004 ஏதென்ஸ் 2 1 0 0 0 0
சீனா 2008 பெய்ஜிங் 2 1 0 0 0 0
ஐக்கிய இராச்சியம் 2012 இலண்டன் 2 2 0 0 0 0
பிரேசில் 2016 இரியோ டி செனீரோ 2 2 0 0 0 0
சப்பான் 2020 தோக்கியோ எதிர்கால நிகழ்வு
மொத்தம் 0 0 0 0

வேறு தகவல்கள்

  • 2012 பூட்டான் அணியில் ஆண்கள் இல்லை.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்