கதிரவமறைப்பு, ஏப்ரல் 30, 2022
ஏப்பிரல் 30, 2022-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | -1.1901 |
அளவு | 0.6396 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 62°06′S 71°30′W / 62.1°S 71.5°W |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 20:42:36 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 119 (66 of 71) |
அட்டவணை # (SE5000) | 9557 |
2022, ஏப்ரல் 30 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்பட்டது.[1][2][3] புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்குச் சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் ன் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
படங்கள்
தொடர்புடைய மறைப்புகள்
2022 இன் கதிரவமறைப்புகள்
- மே 16 அன்று முழு நிலாமறைப்பு .
- அக்டோபர் 25 அன்று ஒரு பகுதிகதிரவமறைப்பு .
- நவம்பர் 8 அன்று முழு நிலாமறைப்பு .
2022 முதல் 2025 வரை கதிரவமறைப்புகள்
இந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். இத்தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள், 4 மணிகளுக்கு (ஓர் அரையாண்டுக்கு) ஒருமுறை நிலா வட்டணையின் மாற்றுக் கணுக்களில் நிகழும்.
சாரோசு 119
இது சாரோசு சுழற்சி 119 இன் ஒரு பகுதியாகும். இதில் , ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்கள் இடைவெளியில் 71 நிகழ்வுகள் ஏற்படும். கிபி 850 மே 15 அன்று பகுதி கதிரவமறைப்புடன் இந்தத் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 9, கிபி 994 அன்றும் ஆகத்து 20, 1012 அன்றும் முழு மறைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஆகத்து 31, 1030 அன்று ஒரு கலப்பின மறைப்பு ஏற்பட்டது. இது செப்டம்பர் 10, 1048 முதல் மார்ச் 18, 1950 வரை வலய மறைப்புகளைக் கொண்டுள்ளது. ஜூன் 24, 2112 அன்று ஒரு பகுதி மறைப்பாக 71 ஆம் நிகழ்வில் தொடர் முடிவடைகிறது. ஆகத்து 20, 1012 அன்று மொத்தம் 32 நொடிகள் மட்டுமே நீண்டது. பெருமக் காலமாக, 1625 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று 7 மணித்துளி 37 நொடிகள் வலயமறைப்பு நிகழ்ந்தது. ஆகத்து 31, 1030 அன்று கலப்புமறைப்பின் நீண்ட காலமாக, 18 நொடிகள் மட்டுமே நிகழ்ந்தது.
தொடர் நிகழ்வுகள் 54–70 1801 மற்றும் 2100 க்கு இடையில் நிகழ்ந்தது: | ||
---|---|---|
54 | 55 | 56 |
</img> </br> டிசம்பர் 21, 1805 |
</img> </br> ஜனவரி 1, 1824 |
</img> </br> ஜனவரி 11, 1842 |
57 | 58 | 59 |
</img> </br> ஜனவரி 23, 1860 |
</img> </br> பிப்ரவரி 2, 1878 |
பிப்ரவரி 13, 1896 |
60 | 61 | 62 |
</img> </br> பிப்ரவரி 25, 1914 |
</img> </br> மார்ச் 7, 1932 |
</img> </br> மார்ச் 18, 1950 |
63 | 64 | 65 |
</img> </br> மார்ச் 28, 1968 |
</img> </br> ஏப்ரல் 9, 1986 |
</img> </br> ஏப்ரல் 19, 2004 |
66 | 67 | 68 |
</img> </br> ஏப்ரல் 30, 2022 |
</img> </br> மே 11, 2040 |
</img> </br> மே 22, 2058 |
69 | 70 | |
</img> </br> ஜூன் 1, 2076 |
</img> </br> ஜூன் 13, 2094 |
மெட்டானிக் தொடர்
மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும், இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்) ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.
மேற்கோள்கள்
- ↑ Rao, Joe (April 29, 2022). "First solar eclipse of 2022 occurs Saturday. Here's what to expect". Space.com.
- ↑ Sottile, Zoe (April 30, 2022). "Don't look up: 2022's first solar eclipse will appear in the southern hemisphere today". CNN.
- ↑ "1st solar eclipse of 2022 appears in southern skies". FOX 7 Austin. May 1, 2022.
வெளி இணைப்புகள்
- Earth visibility chart and eclipse statistics Eclipse Predictions by Fred Espenak, நாசா/GSFC