கதிர்க்கட்டு
கதிர்கட்டு (sheaf ) என்பது பாரம்பரிய முறையில் அரிவாள் கொண்டு அறுவடை செய்யப்பட்ட தானியக் கதிர்களை கொத்தா கட்டிவைக்கும் ஒரு முறையாகும்.
பாரம்பரியமாக கைகளால் அறுவடை செய்பவர்கள், அரிவாள்களைப் பயன்படுத்தி ஒரு குழுவாக அறுவடையில் ஈடுபடுவார்கள். அரிவாளால் அறுக்கப்பட்ட வைக்கோல் கொத்துக்களை இடதுபுறத்தில் வரிசையாக இட்டுச் செல்வர். இவை பின்னர் அவை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு கொண்டவையாக கட்டப்படும். கட்டுகளைக் கட்ட கயிறாக அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் வைக்கோலே பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கதிர்கட்டுகள் பின்னர் போர் போடப்பட்டு உலர்த்ததப்படுகின்றன. இங்கிலாந்தில் மூன்று முதல் எட்டு கதிர்கட்டுகள் கொண்டதாக ஒவ்வொரு போரும் போடப்படுவதுண்டு. இவ்கைப் போர்களின் மேல் பகுதியில் தானியக் கதிர்கள் உள்ளதாக இருக்கும். இது தானியத்தை நல்ல காற்றோட்டத்தால், தரையில் வைத்து உலர்த்தவும், பூச்சிகளிடமிருந்து காக்கவும் ஏற்றதாக உள்ளது. உலர்த்தபட்ட கதிர்கட்டுகள் பின்னர் தலைச் சுமையாகவே அல்லது வண்டியிலோ ஏற்றப்பட்டு கதிரடிக்கும் களத்திற்கு எடுத்துச் செல்லபடுகின்றன )
தொழில்மயமான நாடுகளில் அறுவடை இய்ந்திரமயமான பிறகு, கதிர்க்கட்டுகள் என்பது தேவையற்றவையாக மாற்றியுள்ளன. ஆனால் இன்னமும் கைகளால் அறுவடை செய்பவர் மத்தியில் கதிர்கட்டுகள் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.