கதைக்கோவை (தொடர்)

கதைக்கோவை அல்லது கோவை (anthology series) என்பது தொலைக்காட்சி, வானொலி மற்றும் வெள்ளித்திரையின் ஆகியவற்றின் வழியாக ஒளி(லி)பரப்பு செய்யப்படும் மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு பல்வேறு கதைக்களங்களில் இயங்கும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களைக் குறிப்பதாகும்.[1]

வானொலி

மேற்கத்திய ஒளி(லி)பரப்பு வரலாற்றில் கதைக் கோவைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படத் தொடர்கள் ஆகியவை கோவைகளாக 1927 ஆம் ஆண்டு முதலே ஐக்கிய அமெரிக்காவில் ஒளி(லி)பரப்பாகி வருகின்றன.

'தி காளியர் ஹார்' என்கிற வானொலி நிகழ்ச்சி 1927 இல் தொடங்கி 1932 ஆம் ஆண்டு முதல் ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் அன்றாடம் ஒரு மணிநேரம் வெவ்வேறு களங்களில் கதைகள் சொல்லப்பட்டன. அது முதல் பல்வேறு வானொலி நிலையங்களின் தயாரிப்பில் காதல், அறிவியல், திகில், மர்மம் உள்ளிட்ட தலைப்புகளில் கதைகள் சொல்லும்படியான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ஒலிபரப்பாயின.[2]

1962 ஆம் ஆண்டு ஒலிபரப்பான 'சஸ்பென்ஸ்' என்கிற வானொலி நிகழ்ச்சியோடு கதைக் கோவையின் காலம் வானொலியில் முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது. அதன் பிறகு கோவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான போதிலும், அவை பெருமளவு வரவேற்பு பெற்றிருக்கவில்லை.[3]

தொலைக்காட்சி

1950 களில் ஒளிபரப்பான 'தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்ட்டீல் ஹார்' மற்றும் 'தி ஃபில்க்கோ டெலிவிஷன் ப்ளே ஹௌஸ்' ஆகிய கோவைத் தொடர்கள் பெரும் வரவேற்பு பெற்றன. அதன் பிறகான காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரையில் விதவிதமான கோவை தொடர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.[4][5]

2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் 'அமெரிக்கன் ஹாறர் ஸ்டோரி' மற்றும் 'பிளாக் மிறர்' ஆகியவை தற்காலத்தில் பிரபலமாக உள்ள கோவை தொடர்கள் ஆகும்.

திரைப்படம்

கோவை திரைப்படங்கள் மேற்கத்திய நாடுகளில் அந்த அளவுக்கு பிரபலமானவை அல்ல. ஆண்டுதோறும் ஹாலோவீன், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளின் போது ஐக்கிய அமெரிக்காவில் கோவைத் திரைப்படங்களின் அடுத்தடுத்த தொடர்களை வெளியிடுவது வழக்கம்.[6]

தமிழில்

தமிழில் 1990 கள் முதலே பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் புதினங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் எடுக்கப்பட்டு கோவை தொடராக வெளியாகி வருகின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் 'சின்னத்திரை சினிமா' என்கிற நிகழ்ச்சி கோவை தொடருக்கு சான்றாகும். இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்கள் நாடகங்களாக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.

வானம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக் கதைகள் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் தமிழில் சமீபத்தில் வெளியாகும் கோவை தொடர்களுக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் வானொலி நிலையங்களிலும் கோவைகள் இன்றும் ஒலிபரப்பாகி வருகின்றன. அன்றாடம் ஒரு மணிநேரம் வெவ்வேறு கதைக் களங்களில் வானொலிகள் வாயிலாக கதைகள் சொல்லப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்